போதை பொருள் கடத்தல்: தப்பிய கேரள குற்றவாளி கைது

Added : மே 23, 2022 | |
Advertisement
கூடலுார்;முதுமலை வழியாக கேரளாவுக்கு, போதை பொருள் கடத்த முயன்ற சம்பவத்தில், தப்பிய கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.தமிழக- கர்நாடக எல்லையான கக்கனல்லா சோதனை சாவடியில், 13ல் போலீசார் வாகன சோதனை நடந்தது. அப்போது, பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு, கடத்த முயன்ற, ஐந்து லட்சம் மதிப்பிலான எம்.டி.எம்.ஏ., (மெத்திலின் டியோச்சி மெதம் பேட் ஏமைன்) என்ற போதை பொருள், 100 கிராம் மற்றும் காரை
போதை பொருள் கடத்தல்: தப்பிய கேரள குற்றவாளி கைது

கூடலுார்;முதுமலை வழியாக கேரளாவுக்கு, போதை பொருள் கடத்த முயன்ற சம்பவத்தில், தப்பிய கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.தமிழக- கர்நாடக எல்லையான கக்கனல்லா சோதனை சாவடியில், 13ல் போலீசார் வாகன சோதனை நடந்தது. அப்போது, பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு, கடத்த முயன்ற, ஐந்து லட்சம் மதிப்பிலான எம்.டி.எம்.ஏ., (மெத்திலின் டியோச்சி மெதம் பேட் ஏமைன்) என்ற போதை பொருள், 100 கிராம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.அப்போது, குற்றவாளி வனப்பகுதி வழியாக தப்பினர். கூடலுார் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில், எஸ்.எஸ்.ஐ., ராஜன்; போலீசார் இப்ராகிம், யுவராஜ், அசோக், முத்துசெல்வன் கொண்ட தனி குழு விசாரணை மேற்கொண்டு, தலைமறைவான, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், மொராயூர் எருநாடு பகுதியை சேர்ந்த அஜ்மல்,26, என்பவரை நேற்று முன்தினம், இரவு கைது செய்தனர்.போலீசார் கூறுகையில்,'கடன் காரணமாக சிரமப்பட்ட அஜ்மல், பணத் தேவைக்காக, போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு பணி செய்ய, கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு அதனை கடத்தி வந்துள்ளார். இதன், பின்னணியில் உள்ளவர்கள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X