குரங்கணி மலைப் பாதையில் சேதமடைந்த குவி ஆடிகள் சிரமத்தில் வாகன ஓட்டிகள்| Dinamalar

குரங்கணி மலைப் பாதையில் சேதமடைந்த 'குவி ஆடி'கள் சிரமத்தில் வாகன ஓட்டிகள்

Added : மே 23, 2022 | |
போடி:போடியில் இருந்து குரங்கணி செல்லும் மலைப் பாதையில் விபத்துகளை தவிர்க்க அமைக்கப்பட்டுள்ள குவி ஆடிக்கான கண்ணாடிகள் ஓராண்டாக சீரமைக்கப்படாத நிலையில் பல இடங்களில் உடைந்து உள்ளன. முக்கிய இடங்களில் காணமல் போனதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.தமிழக- கேரள எல்லைப் பகுதியை இணைக்கும் வழித்தடமாக குரங்கணி மலைப்பாதை உள்ளது. போடியில் இருந்து விவசாயிகள், கூலித்

போடி:போடியில் இருந்து குரங்கணி செல்லும் மலைப் பாதையில் விபத்துகளை தவிர்க்க அமைக்கப்பட்டுள்ள குவி ஆடிக்கான கண்ணாடிகள் ஓராண்டாக சீரமைக்கப்படாத நிலையில் பல இடங்களில் உடைந்து உள்ளன. முக்கிய இடங்களில் காணமல் போனதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
தமிழக- கேரள எல்லைப் பகுதியை இணைக்கும் வழித்தடமாக குரங்கணி மலைப்பாதை உள்ளது. போடியில் இருந்து விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் தினந்தோறும் குரங்கணி, கொட்டகுடி பகுதிக்கு சென்று வருகின்றனர். பலர் குரங்கணியில் இருந்து முட்டம், முதுவாக்குடி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல் வழியாக மூணாறு உள்ளிட்ட பகுதிளுக்கு செல்கின்றனர்.
மலைப் பாதையில் வாகன விபத்துக்களை தவிர்க்க, வளைவான பாதைகளில் பின்பக்கமாக வாகனங்கள் வருவதை குவியாடி மூலம் தெரிந்து கொள்ள நெடுஞ்சாலைத் துறை மூலம் 20க்கும் மேற்பட்ட இடங்களில் குவி ஆடி கண்ணாடிகள் பொருத்தப்பட்டன. பல இடங்களில் உடைந்து காட்சிப் பொருளாக உள்ளன. சில இடங்களில் காணாமல் போயுள்ளன. ஓராண்டாகியும் சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். விபத்து ஏற்படும் முன் குவி ஆடி கண்ணாடிகளை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X