தேயிலைக்கு விலை குறைப்பு போராட்டம் நடத்த முடிவு

Added : மே 23, 2022 | |
Advertisement
பந்தலுார்:பந்தலுார் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில், தேயிலை வாரிய அறிவிப்பு விலையை விட குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.நீலகிரியில் தேயிலை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பசுந்தேயிலைக்கு, தேயிலை வாரியம் மாதந்தோறும் விலை நிர்ணயம் செய்து வருகிறது. கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இந்த விலையை வழங்குவதுடன், இந்த விலையை ஒப்பிட்டு,

பந்தலுார்:பந்தலுார் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில், தேயிலை வாரிய அறிவிப்பு விலையை விட குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.நீலகிரியில் தேயிலை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பசுந்தேயிலைக்கு, தேயிலை வாரியம் மாதந்தோறும் விலை நிர்ணயம் செய்து வருகிறது. கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இந்த விலையை வழங்குவதுடன், இந்த விலையை ஒப்பிட்டு, தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் விலையை நிர்ணயம் செய்வது வழக்கம்.இந்நிலையில், கடந்த ஏப்., மாத பசுந்தேயிலை கிலோவுக்கு, 14.57 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை பந்தலுார் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை நிர்வாகம் வழங்காமல், தன்னிச்சயைாக, கிலோவுக்கு, 13 ரூபாய் நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பந்தலுார் சிறு விவசாயிகள் முன்னேற்ற சங்க செயலாளர் விஜயகுமார் கூறுகையில், ''இந்த விதிமீறல் குறித்து, தேயிலை வாரிய செயல் இயக்குனருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. உரிய விலை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X