தேனியில் 24 மணிநேரமும் சட்ட விரோத மது விற்பனை புகார் அளித்தும் கண்டுகொள்ளாத போலீஸ்

Added : மே 23, 2022 | |
Advertisement
தேனி:தேனி, பூதிப்புரம், தப்புக்குண்டில் 24 மணி நேரமும் சட்டவிரோத மது விற்பனை ஜோராக நடக்கிறது. இதுகுறித்து பொது மக்கள் புகார் அளித்தும் போலீசார் கண்டுகொள்வது இல்லை.தேனியில் புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்டு, உழவர் சந்தை பகுதிகளில் 24 மணி நேரமும் சட்டவிரோத மது விற்பனை நடக்கிறது. ரோடுகள் திறந்த வெளி பாராக செயல்படுகின்றன.ரோட்டில் செல்வதற்கு பெண்கள், குழந்தைகள்

தேனி:தேனி, பூதிப்புரம், தப்புக்குண்டில் 24 மணி நேரமும் சட்டவிரோத மது விற்பனை ஜோராக நடக்கிறது. இதுகுறித்து பொது மக்கள் புகார் அளித்தும் போலீசார் கண்டுகொள்வது இல்லை.
தேனியில் புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்டு, உழவர் சந்தை பகுதிகளில் 24 மணி நேரமும் சட்டவிரோத மது விற்பனை நடக்கிறது. ரோடுகள் திறந்த வெளி பாராக செயல்படுகின்றன.ரோட்டில் செல்வதற்கு பெண்கள், குழந்தைகள் அச்சப்படுகின்றனர். புது பஸ் ஸ்டாண்டு எதிரே கல்லுாரி மாணவியிடம் போதை ஆசாமி ஜெயின் பறித்து தப்பி ஓடினார். ஆனால் மதுவின் விற்பனையை கட்டுபடுத்தவோ, ரோந்தை அதிகரிக்கவோ நடவடிக்கை இல்லை.
பூதிப்புரம் சட்ட விரோத பார் குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பின், கலெக்டர் அலுவலகத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தனர். தப்புக்குண்டில் நேரடியாக விற்பனை நடக்கிறது.பல முறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்தும், போலீசார் சட்ட விரோத மதுவிற்பனைக்கு ஆதரவாக செயல்படுவது தொடர்கிறது.
இதுகுறித்து எஸ்.பி., தனிக்கவனம் செலுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X