ஆபாசம் இல்லாமல் கதை எழுதுங்கள்| Dinamalar

'ஆபாசம் இல்லாமல் கதை எழுதுங்கள்'

Added : மே 23, 2022 | |
கோவை:''புதிதாக எழுத வருபவர்கள் ஆபாசம் இல்லாமல் நல்ல கருத்துள்ள கதைகளை எழுதவேண்டும்,'' என, எழுத்தாளர் ராஜேஷ்குமார் பேசினார்.கோவை, சுக்கிரவார்பேட்டை பசுவண்ணன் கோவில் மண்டபத்தில், சங்கப்பலகை அமைப்பு சார்பில், சிறுகதை மற்றும் குறுநாவல் போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடந்தது. எழுத்தாளர் பிரபா தலைமை வகித்தார்.சிறப்பு
'ஆபாசம் இல்லாமல் கதை எழுதுங்கள்'

கோவை:''புதிதாக எழுத வருபவர்கள் ஆபாசம் இல்லாமல் நல்ல கருத்துள்ள கதைகளை எழுதவேண்டும்,'' என, எழுத்தாளர் ராஜேஷ்குமார் பேசினார்.கோவை, சுக்கிரவார்பேட்டை பசுவண்ணன் கோவில் மண்டபத்தில், சங்கப்பலகை அமைப்பு சார்பில், சிறுகதை மற்றும் குறுநாவல் போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடந்தது. எழுத்தாளர் பிரபா தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் ராஜேஷ்குமார் பேசியதாவது:எண்ணம் போல்தான் வாழ்க்கை அமையும் என்று பெரியவர்கள் சொல்வது உண்மை. நல்லதை பற்றி சிந்திப்பவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். எழுத்தாளர்களுக்கு பொறாமை குணம் கூடாது.மூத்த எழுத்தாளர்கள் புதிய எழுத்தாளர்களின் திறமையை அங்கீகரித்து பாராட்ட வேண்டும்.எனக்கு 'கிரைம்' நாவல் மட்டும்தான் எழுதத்தெரியும் என, நினைக்கின்றனர். எனக்கு எல்லா வகையான கதைகளும் எழுதத்தெரியும். சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளரை விட, நல்ல சமூக கதைகளை என்னால் எழுத முடியும். இன்றைக்கு வாசகர்கள் புத்திசாலிகளாக உள்ளனர்; அவர்களை ஏமாற்ற முடியாது. என் வாசகர்கள் என்னிடம் என்ன மாதிரியான கதைகளை எதிர்பார்க்கிறார்களோ அதை நான் எழுதுகிறேன்.புதிதாக எழுத வருபவர்கள், ஆபாசம் இல்லாமல் நல்ல கருத்துள்ள கதைகளை எழுத வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல், நேர்மறை சிந்தனையுள்ள சிறந்த கதைகளை எழுத வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.எழுத்தாளர்கள் இந்திரா சவுந்தரராஜன், ரிஷிபன், பாலகணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X