கோவைக்கு புதிய விமான சேவை:விஸ்தாரா நிறுவனம் அறிமுகம்| Dinamalar

கோவைக்கு புதிய விமான சேவை:விஸ்தாரா நிறுவனம் அறிமுகம்

Added : மே 23, 2022 | |
கோவை:பெங்களூரில் இருந்து கோவைக்கு ஜூன், 3ம் தேதி முதல் தினசரி இரண்டு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக விஸ்தாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.கோவை விமான நிலையத்தில் இருந்து டில்லிக்கு கடந்த, 20ம் தேதி முதல் விமான சேவையை விஸ்தாரா நிறுவனம் துவக்கியது.இதேபோன்று மும்பைக்கு வரும், 27ம் தேதி முதல் தினசரி விமான சேவை துவக்கப்பட உள்ளது. பெங்களூரில் இருந்து கோவைக்கு ஜூன், 3ம் தேதி முதல்

கோவை:பெங்களூரில் இருந்து கோவைக்கு ஜூன், 3ம் தேதி முதல் தினசரி இரண்டு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக விஸ்தாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.கோவை விமான நிலையத்தில் இருந்து டில்லிக்கு கடந்த, 20ம் தேதி முதல் விமான சேவையை விஸ்தாரா நிறுவனம் துவக்கியது.
இதேபோன்று மும்பைக்கு வரும், 27ம் தேதி முதல் தினசரி விமான சேவை துவக்கப்பட உள்ளது. பெங்களூரில் இருந்து கோவைக்கு ஜூன், 3ம் தேதி முதல் தினசரி இரண்டு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.விஸ்தாரா விமான சேவைகள் மூலமாக இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கப்படும், 31வது மாநகரம் கோவை என்பது குறிப்பிடத்தக்கது. டில்லியில் இருந்து கோவைக்கு, 5,899 ரூபாய் முதல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து, 4,299 ரூபாய் முதலும், பெங்களூருவில் இருந்து, 3,849 ரூபாய் முதலும் கட்டணங்கள் நிர்ணயிருக்கப்பட்டுள்ளது.
டில்லியில் இருந்து காலை, 11:45 மணிக்கு புறப்படும் விமானம் கோவைக்கு மதியம், 2:40க்கு வந்தடைகிறது. மறுமார்க்கமாக, கோவையில் இருந்து மதியம், 3:15 மணிக்கு புறப்படும் விமானம் டில்லிக்கு மாலை, 6:20க்கு சென்றடையும். மும்பையில் இருந்து காலை, 11:50க்கு புறப்படும் விமானம் கோவைக்கு மதியம், 1:35 மணியளவில் வந்தடையும்.மறு மார்க்கமாக மதியம், 2:10க்கு புறப்பட்டு மும்பைக்கு மாலை, 4:00 மணிக்கு சென்றடையும்.இதேபோன்று கோவையில் இருந்து இரவு, 7.10 மற்றும், 7:25 மணிக்கு தலா ஒரு விமானம் பெங்களூருக்கு செல்கின்றன. காலை, 8:35 மற்றும் இரவு, 8:55 மணி ஆகிய நேரங்களில் பெங்களூரில் இருந்து கோவைக்கு விமானங்கள் புறப்படுகின்றன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X