எல்லாமே நாங்க தான்.. ஆட்டம் காட்டும் ‛'ஆக்ட்டிங் கவுன்சிலர்' கணவர்கள்

Updated : மே 23, 2022 | Added : மே 23, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
மதுரை:மாப்பிள்ளை அவரு தான்... ஆனால் சட்டை என்னுது' என்ற செந்தில் காமெடி போல் கவுன்சிலர் அவங்க தான்... ஆனால் நாங்க தான் எல்லாமே' என வார்டு நிர்வாக பணிகளில் தலையிட்டு ஆக்ட்டிங்' கவுன்சிலர்களாக வலம் வர துவங்கி விட்டனர் சில பெண் கவுன்சிலர்களின் கணவர்கள்.ஆண்களுக்கு நிகராக பெண்களும் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு, பொறுப்புக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் 50

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை:மாப்பிள்ளை அவரு தான்... ஆனால் சட்டை என்னுது' என்ற செந்தில் காமெடி போல் கவுன்சிலர் அவங்க தான்...latest tamil newsஆனால் நாங்க தான் எல்லாமே' என வார்டு நிர்வாக பணிகளில் தலையிட்டு ஆக்ட்டிங்' கவுன்சிலர்களாக வலம் வர துவங்கி விட்டனர் சில பெண் கவுன்சிலர்களின் கணவர்கள்.ஆண்களுக்கு நிகராக பெண்களும் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு, பொறுப்புக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. மதுரையில் மேயர், 50 பெண் கவுன்சிலர்கள் உட்பட 4 மண்டல, 3 நிலை குழு தலைவர்களும் பெண்கள்தான்.

இதில் சில பெண் கவுன்சிலர்கள் சிலர் ஏற்கனவே கவுன்சிலராக இருந்துள்ளனர்.இந்நிலையில் புதிதாக வந்த பல பெண் கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் குறித்து எதுவும் தெரியவில்லை. அவர்களது கணவர்கள் பின்னால் இருந்து வழிகாட்டுவதில் தவறில்லை. ஆனால், தாங்கள் தான் எல்லாமே என 'பந்தா' காட்டும் கணவர்களில் சிலர் வார்டு நிர்வாக பணிகளிலும் தலையிடுகின்றனர்.
பெண் கவுன்சிலர்களுக்கு வார்டு தொடர்பான புகார் தெரிவிக்க போன் செய்தால், கணவர்கள் தான் எடுத்து பேசுகின்றனர். கவுன்சில் கூட்டத்தில் மட்டும்தான் பங்கேற்கவில்லையே தவிர கவுன்சிலரின் அலுவலகம் துவங்கி, நிர்வாக நடவடிக்கைகளில் இறங்கி கலங்கடிக்கிறார்கள். சில வார்டுகளில் மாநகராட்சி பணியாளர்கள், அலுவலர்கள், பெண் கவுன்சிலர்களின் கணவர்களுக்கு இடையே சலசலப்பு ஏற்பட துவங்கி விட்டது.


latest tamil news
இவ்வாறு கணவர்கள் நிர்வாகத்தில் தலையிடுவதை தி.மு.க., அ.தி.மு.க., கட்சி தலைமை, மாநகராட்சி நிர்வாகம் கணவர்களின் தலையீட்டை தடுக்க வேண்டும். தடுக்க தவறினால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்படும் என்கிறார்கள் பொதுமக்கள்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
23-மே-202219:52:46 IST Report Abuse
Girija தெரிஞ்சு தானே துட்டுக்கு ஓட்டு போட்டீக ? அஞ்சு வருஷத்திற்கு ஒருதரம் சூடு வச்கிட்டா தான் திராவிட தமிழனுக்கு உரைக்கும.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
23-மே-202215:05:20 IST Report Abuse
D.Ambujavalli Just signing in the election application form and receiving the certificate of election is the role of women candidates. After that the Admn. And all affairs are handed over to the male members. This is the vidiyal law
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
23-மே-202213:01:00 IST Report Abuse
Ramesh Sargam முதல்வரே, இதுபோன்று அக்கிரமங்கள் நடப்பது உங்களுக்கு தெரியாதா? தெரிந்தும் ஏன் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை? இல்லை, அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று கூறி தப்பிக்க பார்க்கிறீர்களா? இது எதிர் கட்சியின் சூழ்ச்சி என்றுகூறி மறுக்கப்போகிறீர்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X