சீரமைப்பில் ஆமை வேகம்: மழை காலத்தில் மக்கள் அவதி| Dinamalar

சீரமைப்பில் 'ஆமை' வேகம்: மழை காலத்தில் மக்கள் அவதி

Added : மே 23, 2022 | |
பந்தலுார்:பந்தலுார் அருகே புத்துார்வயல் பகுதியில், பாலம் கட்டும் பணி முழுமை பெறாததால், சேறும் சகதியுமாக மாறியுள்ளது.பந்தலுார் அருகே, குந்தலாடியிலிருந்து, கூடலுார் பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. அதில், புத்துார் வயல் பகுதியில் சாலையின் குறுக்கே செல்லும் நீரோடையை கடக்க நிரந்தர பாலம் இல்லாத நிலையில், மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து, சாலையில்
சீரமைப்பில் 'ஆமை' வேகம்: மழை காலத்தில் மக்கள் அவதி

பந்தலுார்:பந்தலுார் அருகே புத்துார்வயல் பகுதியில், பாலம் கட்டும் பணி முழுமை பெறாததால், சேறும் சகதியுமாக மாறியுள்ளது.பந்தலுார் அருகே, குந்தலாடியிலிருந்து, கூடலுார் பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. அதில், புத்துார் வயல் பகுதியில் சாலையின் குறுக்கே செல்லும் நீரோடையை கடக்க நிரந்தர பாலம் இல்லாத நிலையில், மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து, சாலையில் செல்வதால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.தொடர்ந்து, கூடலுார் ஊராட்சி ஒன்றியம் சார்பில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் தடுப்பு சுவர் அமைத்து, பாலத்தை முழுமையாக சீரமைக்கவில்லை. இதனால், மழை பெய்தால் இப்பகுதி சேறும், சகதியுமாக மாறி பாதசாரிகளும், டிரைவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, பாலம் பணியை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X