காற்றில் சாய்ந்த நேந்திரன் வாழைநஷ்டத்தில் சிறு விவசாயிகள்| Dinamalar

காற்றில் சாய்ந்த நேந்திரன் வாழைநஷ்டத்தில் சிறு விவசாயிகள்

Added : மே 23, 2022 | |
கூடலுார்:கூடலுாரில் வீசிய பலத்த காற்றில், 500க்கும் மேற்பட்ட நேந்திரன் வாழை மரங்கள் சாய்ந்தன.கூடலுார் பகுதியில், நேற்று முன்தினம், மாலை மழையுடன் சில பகுதிகளில் பலத்த காற்று வீசியது. பாடந்துறை, சுண்டவயல் பகுதியில் வீசிய காற்றில், 400 வாழை மரங்கள்; புளியம்பாறை பகுதியில், 100 வாழை மரங்கள் சாய்ந்தன.ஓரிரு மாதங்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில், வாழை மரங்கள் சாய்ந்ததால்,

கூடலுார்:கூடலுாரில் வீசிய பலத்த காற்றில், 500க்கும் மேற்பட்ட நேந்திரன் வாழை மரங்கள் சாய்ந்தன.கூடலுார் பகுதியில், நேற்று முன்தினம், மாலை மழையுடன் சில பகுதிகளில் பலத்த காற்று வீசியது. பாடந்துறை, சுண்டவயல் பகுதியில் வீசிய காற்றில், 400 வாழை மரங்கள்; புளியம்பாறை பகுதியில், 100 வாழை மரங்கள் சாய்ந்தன.ஓரிரு மாதங்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில், வாழை மரங்கள் சாய்ந்ததால், ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில்,'கடந்த ஆண்டும் நேந்திரன் வாழைக்கு விலை இன்றி நஷ்டத்தை சந்தித்த நிலையில், தற்போது, 40 ரூபாய்க்கு மேல், விலை கிடைத்து வருகிறது. காட்டு யானைகளிடம் இருந்து வாழைகளை பாதுகாக்க சிரமப்பட்டு வரும் நிலையில், காற்றில் வாழை மரங்கள் சாய்ந்தது நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X