சத்குரு சேவாஸ்ரமத்தில் இலவச தங்கும் இடம்:ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்| Dinamalar

சத்குரு சேவாஸ்ரமத்தில் இலவச தங்கும் இடம்:ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Added : மே 23, 2022 | |
கோவை:ஆர்.எஸ். புரம், சத்குரு சேவாஸ்ரம் குழந்தைகள் இல்லத்தில் சேர்க்கைபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தி சேவாஸ்ரமம் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் சத்குரு சேவாஸ்ரமத்தில் குழந்தைகளுக்கு இலவசமாக தங்கும் இடம், உணவு, உடை மற்றும் கல்விக் கட்டணம் வழங்கப்படுகிறது. பெற்றோரை இழந்து வறுமையில் வாடும், ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஆறாம் வகுப்பு முதல் தமிழ்வழி

கோவை:ஆர்.எஸ். புரம், சத்குரு சேவாஸ்ரம் குழந்தைகள் இல்லத்தில் சேர்க்கைபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தி சேவாஸ்ரமம் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் சத்குரு சேவாஸ்ரமத்தில் குழந்தைகளுக்கு இலவசமாக தங்கும் இடம், உணவு, உடை மற்றும் கல்விக் கட்டணம் வழங்கப்படுகிறது. பெற்றோரை இழந்து வறுமையில் வாடும், ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஆறாம் வகுப்பு முதல் தமிழ்வழி கல்வி படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் தங்களது பள்ளி மாற்றுசான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படம், பெற்றோர் இல்லை என்பதற்கான ஆதாரம் ஆகியவற்றுடன், சத்குரு சேவாஸ்ரம், 30, வெங்கிடசாமி ரோடு(கிழக்கு), ஆர்.எஸ். புரம், கோவை-641002 என்ற முகவரியில் நேரில் விண்ணப்பங்கள் அளிக்கலாம்.மேலும், Sevashram1936@gmail.com, www.Sevashram.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, 0422 2552034, 83002 07034 ஆகிய எண்களிலும் தொடர்புகொள்ளலாம் என, சேவா பாரதி கவுரவத் தலைவர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X