சமூக வலைதளத்தில் உடனுக்குடன் பதிலடி:அ.தி.மு.க., கூட்டத்தில் வேலுமணி பேச்சு

Added : மே 23, 2022 | |
Advertisement
கோவை:''அ.தி.மு.க., ஐ.டி., பிரிவினர், சமூக வலைதளங்களில் உடனுக்குடன் பதிலடி தரும் பணியில் தீவிரமாக செயல்பட வேண்டும்,'' என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி (ஐ.டி., விங்) மண்டல ஆலோசனை கூட்டம், சிங்காநல்லுார் வரதராஜபுரத்தில் நேற்று நடந்தது. மண்டல செயலாளர்கள் கோவை சத்யன் உள்ளிட்டோர் முன்னிலையில், மாவட்ட செயலாளர்கள் சசிகுமார், சக்திவேல்,
சமூக வலைதளத்தில் உடனுக்குடன் பதிலடி:அ.தி.மு.க., கூட்டத்தில் வேலுமணி பேச்சு

கோவை:''அ.தி.மு.க., ஐ.டி., பிரிவினர், சமூக வலைதளங்களில் உடனுக்குடன் பதிலடி தரும் பணியில் தீவிரமாக செயல்பட வேண்டும்,'' என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி (ஐ.டி., விங்) மண்டல ஆலோசனை கூட்டம், சிங்காநல்லுார் வரதராஜபுரத்தில் நேற்று நடந்தது. மண்டல செயலாளர்கள் கோவை சத்யன் உள்ளிட்டோர் முன்னிலையில், மாவட்ட செயலாளர்கள் சசிகுமார், சக்திவேல், மணிகண்டன் ஆகியோர் தீர்மானங்களை வாசித்தனர்.
கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வேலுமணி, ''தி.மு.க., அரசின் பொய் பிரசாரத்தை அ.தி.மு.க., ஐ.டி., பிரிவினர் முறியடிக்க வேண்டும். தி.மு.க.,வினருக்கு உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பதிலடியும் கொடுக்க வேண்டும். சொத்து வரி உயர்வு, மின் வெட்டு, அ.தி.மு.க., திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற செயல்கள் பற்றி சமூக வலைதளம் மூலம் தீவிர பிரசாரம் செய்ய வேண்டும். தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். உங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை கட்சி ஏற்படுத்தித்தரும்,'' என்றார்.கோவை மண்டல செயலாளர் சிங்கை ராமச்சந்திரன், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஐ.டி., பிரிவு அ.தி.மு.க.,வினர், எம்.எம்.ஏ.,க்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X