நமக்கு நாமே திட்டத்தில் நூலகத்துக்கு கட்டடம்! பொதுமக்கள் பங்களிப்பு நிதி ஒப்படைப்பு

Added : மே 23, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஜோதிநகரில், நமக்கு நாமே திட்டத்தில் நுாலகம் அமைக்க, தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் பங்களிப்பாக, ஆறு லட்சம் ரூபாய் நிதி நகராட்சி நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சி, 35வது வார்டு ஜோதி நகர் பகுதியில், கடந்த, 2012ம் ஆண்டு பகுதி நேர நுாலகம் துவங்கப்பட்டது. அதன்பின், 2014ம் ஆண்டு ஊர்புற நுாலகமாக தரம் உயர்த்தப்பட்டது.வாடகை கட்டடத்தில், 6,165
நமக்கு நாமே திட்டத்தில் நூலகத்துக்கு கட்டடம்! பொதுமக்கள் பங்களிப்பு நிதி ஒப்படைப்பு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஜோதிநகரில், நமக்கு நாமே திட்டத்தில் நுாலகம் அமைக்க, தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் பங்களிப்பாக, ஆறு லட்சம் ரூபாய் நிதி நகராட்சி நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சி, 35வது வார்டு ஜோதி நகர் பகுதியில், கடந்த, 2012ம் ஆண்டு பகுதி நேர நுாலகம் துவங்கப்பட்டது. அதன்பின், 2014ம் ஆண்டு ஊர்புற நுாலகமாக தரம் உயர்த்தப்பட்டது.வாடகை கட்டடத்தில், 6,165 புத்தகங்களுடன் ஊர்புற நுாலகம் செயல்படுகிறது. தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள், வார இதழ்கள் உள்ளன. மொத்தம், 682 உறுப்பினர்கள், 13 புரவலர்களை கொண்ட நுாலகமாக உள்ளது.ஊர்புற நுாலகத்துக்கான வாடகையை குடியிருப்போர் சங்கம் செலுத்தி வருகிறது. ஜோதிநகரில், நகராட்சி வசம் உள்ள, நுாலகத்துக்காக ஒதுக்கப்பட்ட, 64 சென்ட் இடத்தில், நுாலகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், 'நமக்கு நாமே திட்டத்தில்' ஊர்புற நுாலகம் அமைக்கலாம் என அப்பகுதி தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகள், குடியிருப்புவாசிகள் திட்டமிட்டனர். இதற்காக நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற நிலையில், பொதுமக்களின் பங்களிப்பாக நிதி பெறப்பட்டது.ஜோதிநகர் சமரச சுத்த சன்மார்க்க சங்கம், விவேகானந்தர் நற்பணி மன்றம், குடியிருப்போர் நல சங்கத்தினர், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில், நுாலகம் அமைக்க, ஆறு லட்சம் ரூபாய் பொதுமக்கள் பங்களிப்பாக பெறப்பட்டது.இந்த நிதியை, காசோலையாக நேற்று நகராட்சி தலைவர் சியாமளா, கமிஷனர் தாணுமூர்த்தியிடம் வழங்கினர். துணை தலைவர் கவுதமன், கவுன்சிலர் வைஷ்ணவி மற்றும் மக்கள் பங்கேற்றனர்.மக்கள் கூறுகையில், 'வாடகை கட்டடத்தில் செயல்படும் ஊர்புற நுாலகத்துக்கு, நிரந்தர கட்டடம் கட்ட, நமக்கு நாமே திட்டத்தில் ஆறு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அரசின் நிதியுடன் மொத்தம், 18 லட்சம் ரூபாய் செலவில் நுாலகம் கட்டப்பட உள்ளது,' என்றனர்.நகராட்சி தலைவர் கூறியதாவது:நகராட்சியில், 'நமக்கு நாமே' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள், மூன்றில் ஒரு பங்கு நிதி கொடுத்தால், அரசின் நிதியையும் பெற்று, நகராட்சி வாயிலாக மக்களுக்கு தேவையான வசதி ஏற்படுத்தப்படும்.அதே நேரம், மொத்த மதிப்பீட்டில், 50 சதவீத தொகையை மக்கள் பங்களிப்பாக அளித்தால், அந்த பணியை அவர்களே மேற்கொள்ளலாம். தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகள் வழங்கும் நிதியோடு, அரசின் நிதியையும் பெற்று, பூங்காக்கள், நுாலகம், கழிப்பிடம், சமுதாய கூடம் உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளலாம்.அதன் அடிப்படையில், பொள்ளாச்சி ஜோதிநகர் மக்கள் வழங்கிய ஆறு லட்சம் ரூபாய் நிதியுடன், 12 லட்சம் பெற்று மொத்தம், 18 லட்சம் ரூபாயில் நுாலகம் அமைக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X