போத்தனூர்;சுந்தராபுரம், சாரதா மில் ரோட்டில் வி.எஸ்.செங்கோட்டையா நினைவு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படிப்பை முடித்தவர்களில், தற்போது மாநகராட்சி கவுன்சிலர்களாக தனலட்சுமி(தெற்கு மண்டல தலைவர், 94வது வார்டு), 96வது வார்டு குணசேகரன், 98வது வார்டு உதயகுமார், 99வது வார்டு அஸ்லம் பாஷா மற்றும், 100வது வார்டு கார்த்திகேயன் ஆகியோர் உள்ளனர்.இவர்களுடன் நீர் மேலாண்மைக்கான மத்திய அரசு விருது பெற்ற கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஆகியோருக்கு, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் பாராட்டு விழா, சுந்தராபுரம், செங்கப்பகோனார் திருமண மண்டபத்தில் நடந்தது.இவர்களுக்கு பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்கள் ஜெகனாதன், கோபால், பழனியாண்டி, ஆசிரியர்கள் வீரபத்ரன், சுந்தரம், லட்சுமணன், இந்நாள் தலைமையாசிரியர் ரமேஷ் உள்ளிட்டோர் கவுரவித்து, விருது வழங்கினர். மணிகண்டன் சார்பில் அவ்வமைப்பை சேர்ந்தவர்கள் விருதை பெற்றுக்கொண்டனர்.தொடர்ந்து, ஸ்ரீ குழல் ஆயர் பீடத்தின் நாராயண ஜீயர் உட்பட பலர் வாழ்த்தினர். முன்னாள் கவுன்சிலர் தங்கராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முருகேசன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE