நகர செயலாளர் மீது தாக்கு
ராஜபாளையம்: ராஜபாளையம் அ.தி.மு.க., வடக்கு நகர செயலாளர் முருகேசன் 52, பொன்னகரம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் 32, இருவரும் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கட்டண கழிப்பறை அருகே எடை மெஷின் சரிபார்க்க சென்றனர்.இந்நிலையில் கழிப்பறை பணியாளர் காளிமுத்துவிடம், அதே பகுதியை சேர்ந்த பாரதி, சுந்தர், மாடசாமி, ஹரிசுதன் தகராறில் ஈடுபட்டனர். இதை முருகேசன் தட்டி கேட்ட போது பாரதி கீழே இருந்த மது பாட்டிலை எடுத்து முருகேசன், ஜெயராமன் தலை பின்புறம் அடித்துள்ளார். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற மூவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். வடக்கு பேலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் தாய், குழந்தைகள் காயம்
சிவகாசி: சாட்சியாபுரம் என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் சங்கரேஸ்வரி 30. இவர் தனது ஸ்கூட்டியில் தன்னுடைய இரு குழந்தைகளுடன் சாட்சியாபுரம் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த அண்ணாமலையார் காலனியை சேர்ந்த ஆகார்ஷ் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் சங்கரேஸ்வரி, இரு குழந்தைகள் காயமடைந்தனர். டவுன் போலீஸார் விசாரிக்கின்றனர்.
பணத்தை தராதவருக்கு அடி
சிவகாசி: சோலை காலனி பெரியகருப்பன் ரோடு பகுதியை சேர்ந்தவர் சக்தீஸ்வரன் 34. சோப்பு வியாபாரியான இவர் அதே பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டியிடம் ரூ.3 லட்சம் வாங்கி இருந்தார். பணத்தை திருப்பித் தராததால் செல்லபாண்டியன், சக்தீஸ்வரனை தகாத வார்த்தை பேசி அடித்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா வைத்திருந்த மூதாட்டி கைது
விருதுநகர்: விருதுநகர் சூலக்கரை மேடு வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே நின்றிருந்த ரஞ்சிதம் 50, என்பவரை சோதனை செய்ததில் அவர் விற்பனை செய்வதற்கு வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
வாகனம் மோதி ஒருவர் பலி
காரியாபட்டி: மதுரை மாவட்டம் கள்ளிக்குடி எஸ்.வெள்ளாகுளத்தை சேர்ந்த தங்கப்பாண்டி 40. அருப்புக்கோட்டையில் கூலி வேலை செய்து வரும் இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து டூவீலரில் வந்தார். கல்குறிச்சி அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி (ஹெல்மெட் அணியவில்லை) பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE