மாநில கருத்தரங்கு: செயல்திட்ட கண்காட்சிக்கு பரிசு

Added : மே 23, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியில், 'பாலிசம், 2022' என்ற தலைப்பில், ஒரு நாள் மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான பல்நோக்கு கருத்தரங்கம் நடந்தது. தமிழகத்தில் இருந்து, 15 பாலிடெக்னிக் கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். வி.வி.டி.என்., டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளின் துணை தலைவர்
மாநில கருத்தரங்கு: செயல்திட்ட கண்காட்சிக்கு பரிசு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியில், 'பாலிசம், 2022' என்ற தலைப்பில், ஒரு நாள் மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான பல்நோக்கு கருத்தரங்கம் நடந்தது. தமிழகத்தில் இருந்து, 15 பாலிடெக்னிக் கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார்.
வி.வி.டி.என்., டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளின் துணை தலைவர் பாலகுமார் சின்னசாமி பேசுகையில், ''திறன் மேம்பாடு மற்றும் தகுந்த வாய்ப்புகளை கண்டறிதல், ஆகிய இரு முனைகளையும் சரியாக இணைப்பதற்கு, இளைஞர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை மேம்படுத்திக்கொண்டால் உலக அளவில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றியை அடைவதற்கு நேர்மையான முயற்சிகளுடன், ஆசை, அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாடு ஆகிய மூன்று படிகள் இருக்க வேண்டும்,'' என்றார்.
என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி, அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். முன்னதாக, மின்னணுவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி சுதாராணி வரவேற்றார். எஸ்.ஜி.எஸ்., தலைவர் வருண்குமார் நன்றி கூறினார். தொடர்ந்து, ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்தல், செயல்திட்ட கண்காட்சி, கணினி வரைகலை மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகிய போட்டிகள், வெவ்வேறு அரங்குகளில் நடைபெற்றன.நிறைவு விழாவில், பங்கேற்றவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகளை கல்லுாரி முதல்வர் மற்றும் பாலிசம் ஒருங்கிணைப்பாளர்கள் மைக்கேல் ஞானராஜ், புவனேஸ்வரி வழங்கினர்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X