ஆவினில் முறைகேடு குறித்த விசாரணை துவங்கியது

Updated : மே 23, 2022 | Added : மே 23, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
மதுரை:மதுரை ஆவினில் நடந்த பணி நியமனங்கள், முறைகேடுகள் குறித்து துணைப்பதிவாளர் (பால்வளம்) கணேசன் தலைமையில் விசாரணை துவங்கியுள்ளது. மதுரை ஆவினில் 2019ல் அறிவிப்பு வெளியிட்டு 2020ல் மேலாளர் முதல் டெக்னீஷியன்கள் (எஸ்.எப்.,) வரை 61 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் பலர் நியமனம் செய்யப்பட்டனர்.இதில் தகுதியில்லாதவர்களுக்கு பணி வழங்கியது, எழுத்து தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை:மதுரை ஆவினில் நடந்த பணி நியமனங்கள், முறைகேடுகள் குறித்து துணைப்பதிவாளர் (பால்வளம்) கணேசன் தலைமையில் விசாரணை துவங்கியுள்ளது.



latest tamil news



மதுரை ஆவினில் 2019ல் அறிவிப்பு வெளியிட்டு 2020ல் மேலாளர் முதல் டெக்னீஷியன்கள் (எஸ்.எப்.,) வரை 61 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் பலர் நியமனம் செய்யப்பட்டனர்.இதில் தகுதியில்லாதவர்களுக்கு பணி வழங்கியது, எழுத்து தேர்வு
வினாத்தாள் 'லீக்', விண்ணப்பங்களில் இணைக்கப்பட்ட காசோலை மோசடி,தகுதியான
பலருக்கு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்காதது உட்பட பல முறைகேடுகள் நடந்ததாக சர்ச்சை எழுந்தன.
இதுகுறித்து ஆவின் விஜிலென்ஸ் அதிகாரிகள் குழுவால் பலகட்ட விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டதால் கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 81ன் படி தற்போது துறைரீதியான விசாரணையை துணைப் பதிவாளர்கணேசன் துவக்கியுள்ளார்.


latest tamil news




ஆவின் அலுவலர்கள் கூறியதாவது: 2020ல் நடந்த இப்பணிநியமனங்களில் பல முறைகேடுகள்
நடந்திருப்பது அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டு வருகிறது.ஆனால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவில்லை. அவர்களிடமும் விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.


Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
23-மே-202221:20:34 IST Report Abuse
Ramesh Sargam முறைகேடு இல்லாத, ஊழல் இல்லாத துறை எங்காவது இருந்தா சொல்லுங்க. பார்க்கனும்போல ஆசையா இருக்கு.
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
23-மே-202219:20:27 IST Report Abuse
mindum vasantham ஆவின் நிறுவனத்தில் வேலைக்கான தேர்வு நடந்தது எப்போதும் தேர்வு நடந்தால் cutoff என்ன எத்தனை பேர் தேர்வானார் என்று விஷயம் இணையத்தளத்தில் வெளி வரும் அது எதுவும் வெளி வராமல் ஆவினில் ஆள்தேர்வு நடந்தது எப்பிடி நடந்திருக்கும் என்று யூகித்து கொள்ளுங்கள்
Rate this:
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
23-மே-202210:44:16 IST Report Abuse
நக்கீரன் ஹா... ஹா,...நல்ல காமெடிதான்.
Rate this:
Hari - chennai,இந்தியா
23-மே-202212:09:30 IST Report Abuse
Hariஒன்றை நீங்கள் புரிந்துகொள்ளணும் ,சர்க்கஸ் கோமாளியை கோட்டைக்கு அனுப்பினால் அங்கு ராஜாவின் பணியை செய்ய ராஜா ஆகிவிடமுடியுமா கோட்டைதான் சர்க்கஸ் கூடாரமாக மாறும் இது யாரோட தவறு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X