போக்குவரத்து ஸ்தம்பிப்பு
பொள்ளாச்சி, போலீஸ் ஸ்டேஷன் ரோடு குறுகலாக உள்ளதால், போக்குவரத்து பாதிக்கிறது. மேலும், தடையை மீறி அவ்வழியாக கார்கள் இயக்கப்படுவதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. வாகன போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்த வேண்டும்.- கவின், பொள்ளாச்சி.
ஒளிராத தெருவிளக்குகள்
பொள்ளாச்சி - கோவை ரோட்டில், மகாலிங்கபுரம் ஆர்ச் முன்பக்கமுள்ள தெருவிளக்கு ஒளிராமல் உள்ளன. இந்த ரோட்டிலுள்ள பெரும்பாலான தெருவிளக்குகள் பழுதாகியுள்ளன. விரைவில் விளக்குகளை சீரமைக்க வேண்டும்.- வேல், பொள்ளாச்சி.
கட்டட கழிவு குவிப்பு
பொள்ளாச்சி, வெங்கட்ரமணன் வீதி அருகே, சுப்பையா பிள்ளை வீதி திரும்பும் இடத்தில், கட்டட கழிவு கொட்டப்பட்டுள்ளது. இதனால், இடையூறு ஏற்படுவதால், கழிவை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- முரளி, பொள்ளாச்சி.
கழிவுநீர் தேக்கம்
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, டி.கோட்டாம்பட்டி கிருஷ்ணசாமி நகரில், குடியிருப்புகளுக்கு மத்தியில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- குலாம் முகமது பாஷா, கிருஷ்ணசாமி நகர்.
சாக்கடை துார்வாரணும்!
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பல இடங்களில் சாக்கடை கால்வாய்கள் துார்வாரப்படாமல் உள்ளதால், மழைநீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. கால்வாய்களை துார்வாரி, சுத்தப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- லட்சுமி, பொள்ளாச்சி.
கால்நடைகளால் இடையூறு
வால்பாறை நகரில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில், ரோட்டில் உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்த, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும், கால்நடைகள் கட்டுப்பாடின்றி ரோட்டில் சுற்றுகின்றன.- ரவி, வால்பாறை.
கடும் துர்நாற்றம்
ஆனைமலை முக்கோணம் பகுதியில், நிழற்கூரை அருகே மழைநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. மழைநீர் தேங்காத வகையில் மண் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.- குமார், ஆனைமலை.
குப்பை குவிப்பு
ஆனைமலை, சேத்துமடை பகுதியில் பல இடங்களில் ரோட்டோரம் குப்பை குவிக்கப்பட்டுள்ளது. மழை காலத்தில் சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குப்பையை சுத்தம் செய்ய, வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- குபேந்திரன், ஆனைமலை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE