'அப்பாடா' என்கிறது 'விளாங்குறிச்சி!'விழுந்து, எழுந்து பயணித்த மக்கள் மகிழ்ச்சி

Added : மே 23, 2022 | |
Advertisement
கோவை:ஓராண்டு காலமாக குண்டும் குழியுமாக காட்சியளித்து வந்த விளாங்குறிச்சி சாலையில், தற்போது புதுப்பிக்கும் பணி நடந்து வருவதால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.தண்ணீர் பந்தலில் இருந்து விளாங்குறிச்சி செல்லும் சாலையில், சுமார் ஓராண்டுக்கு முன் காஸ் குழாய் பதிக்கும் பணி துவங்கியது. ஆனால், குழாய் பதிக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வந்தது. அதே சமயம், குடிநீர் குழாய்
'அப்பாடா' என்கிறது 'விளாங்குறிச்சி!'விழுந்து, எழுந்து பயணித்த மக்கள் மகிழ்ச்சி

கோவை:ஓராண்டு காலமாக குண்டும் குழியுமாக காட்சியளித்து வந்த விளாங்குறிச்சி சாலையில், தற்போது புதுப்பிக்கும் பணி நடந்து வருவதால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.தண்ணீர் பந்தலில் இருந்து விளாங்குறிச்சி செல்லும் சாலையில், சுமார் ஓராண்டுக்கு முன் காஸ் குழாய் பதிக்கும் பணி துவங்கியது. ஆனால், குழாய் பதிக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வந்தது. அதே சமயம், குடிநீர் குழாய் சீரமைப்பு, கேபிள் பதிப்பு, போர்வெல் குழாய் சீரமைப்பு பணிகளும் நடந்ததால், சாலை முழுவதும் குழி தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளித்தது.
இதனால், புழுதி பறக்கும் சாலையை கடக்க முடியாமலும், போக்குவரத்து நெரிசலில் சிக்கியும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர்.குழி சரியாக மூடப்படாததால், இருசக்கர வாகனத்தில் சென்ற, 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சறுக்கி விழுந்து, பின்னால் வந்த லாரியில் சிக்கி, பரிதாபமாக பலியானார்.
கோபமடைந்த பொதுமக்கள், ஒரு கட்டத்தில்பணிகளை விரைந்து முடித்து சாலைகளை புதுப்பிக்க வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். நமது நாளிதழில் பலமுறை படத்துடன் செய்தி வெளியானது. இதன் காரணமாக, தண்ணீர் பந்தல் முதல் சேரன்மாநகர் வரை குழாய் பதிக்கும் பணிகள் அவசர அவசரமாக முடிக்கப்பட்டு, தற்போது தார்ரோடு போடும் பணிகள் நடக்கின்றன. ஒரு வழியாக விமோசனம் கிடைத்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X