'மண் காப்போம்' இயக்கம் வெற்றி பெற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து !

Updated : மே 23, 2022 | Added : மே 23, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக சத்குரு தொடங்கியுள்ள 'மண் காப்போம்' இயக்கத்திற்கு மாண்புமிகு உத்திரப் பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் ஆதரவு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நம்முடைய உடல் - மண், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனது. இவை தான் நம் வாழ்வை முடிவு செய்கிறது. தண்ணீர் மற்றும்
'மண் காப்போம்' இயக்கம் வெற்றி பெற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து !

மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக சத்குரு தொடங்கியுள்ள 'மண் காப்போம்' இயக்கத்திற்கு மாண்புமிகு உத்திரப் பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் ஆதரவு தெரிவித்துள்ளார்.


latest tamil news
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நம்முடைய உடல் - மண், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனது. இவை தான் நம் வாழ்வை முடிவு செய்கிறது. தண்ணீர் மற்றும் காற்றின் தரத்தை மண் தான் தீர்மானிக்கின்றது. எனவே, மண்ணை வளமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். சத்குரு அவர்களின் மண் காப்போம் இயக்கத்திற்கு எனது மனமார்ந்த ஆதரவுகள்; வெற்றி பெற வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/myogiadityanath/status/1527886973393698816

இதற்கு நன்றி கூறும் விதமாக, சத்குரு பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நமஸ்காரம் ஸ்ரீ யோகி ஆதித்யநாத் அவர்களே. மண் காப்போம் இயக்கத்திற்கு தாங்கள் ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி. இவ்வுலகின் உயிர்சூழலை இணைத்து வைத்திருக்கும் உயிர்ப்பான இணைப்பு - மண். இந்த இணைப்பினை வலுப்படுத்தி பேணுவது இவ்வுலகின் வருங்காலத்தினை பாதுகாக்க மிக முக்கியம்” என குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/SadhguruJV/status/1528059699995652096

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி, கர்நாடக முதல்வர் திரு. பசவராஜ் பொம்மை, கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த், மணிப்பூர் முதல்வர் திரு. பிரேன் சிங், டில்லி துணை முதல்வர் திரு. மணீஷ் சிசோடியா, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. பூபேந்தர் யாதவ், மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர், மத்திய கல்வித் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் திரு. மீனாட்சி லேகி, மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் திரு. அஸ்வினி குமார் செளபே உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


latest tamil newsஇது தவிர உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், இசை கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் என பல தரப்பினரும் இவ்வியக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மண் வளப் பாதுகாப்பிற்காக 100 நாட்களில் 30,000 கி.மீ தனி ஆளாக மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சத்குரு ஐரோப்பா, மத்திய ஆசிய நாடுகள் வழியாக மத்திய கிழக்கு நாடுகளில் பயணம் செய்து வருகிறார். இம்மாத இறுதியில் அவர் இந்தியா வர உள்ளார்.


ஊடக தொடர்புக்கு: 90435 97080, 78068 07107


Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
23-மே-202217:56:41 IST Report Abuse
DVRR யோகியின் அதிரடி பாருங்கள் : உத்தரபிரதேசத்தில் பிபிஎல் ரேஷன் கார்டு ரத்து செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.பிபிஎல் ரேஷன் கார்டுக்கு தகுதியில்லாதவர்கள் மே 22ஆம் தேதிக்குள் பிபிஎல் ரேஷன் கார்டை ஒப்படைக்க வேண்டும், இல்லையெனில் இதுவரை எடுத்த ரேஷன் தொகை திரும்பப் பெறப்படும் என உபி அரசு உத்தரவிட்டுள்ளது.உ.பி.யில் இன்று ஒரே நாளில் 1 லட்சத்து 88 ஆயிரம் பேர் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்துள்ளனர். கார் வைத்திருப்பவர்கள், ஏசி வைத்திருப்பவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள், 100 சதுர மீட்டர் பரப்பளவில் வீடு வைத்திருப்பவர்கள், அரசு வேலை - இப்படி உள்ளவர்கள் பி பி எல் ரேஷன் கார்டை வைத்திருக்க தகுதி இல்லை மற்றும் அவர்கள் மே 22 ஆம் தேதிக்குள் தங்கள் பிபிஎல் ரேஷன் கார்டை ஒப்படைக்க வேண்டும். இன்று உ.பி.யில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் கார்டை சரண்டர் செய்ய நீண்ட வரிசை இருந்தது. பப்புவின் இனிய வாந்தியை நாளை கேட்பீர்கள் - பிபிஎல் கார்டு வைத்திருப்பவர்களை பாஜக யோகி எப்படி சித்ரவதை செய்கிறார் என்று பாருங்கள்
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
23-மே-202218:55:38 IST Report Abuse
Rajaஇந்த செய்தியை உத்தர பிரதேச அரசே மறுத்துள்ளது. வாட்சப்பில் வரும் வதந்திகளை செய்தியாக நினைப்பவர்கள் இருப்பதால்தான் சில அரசியல் கட்சிகளின் வாழ்க்கை நடக்கிறது....
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
23-மே-202212:29:33 IST Report Abuse
Sandru வெளி நாட்டில் மண் வளம் காக்க ஜக்கி மோட்டார் சைக்கிளில் மண் வெட்டி சகிதம் கிளம்பி விட்டார் .
Rate this:
Cancel
மணி - புதுகை,இந்தியா
23-மே-202211:58:33 IST Report Abuse
மணி எல்லோருட நிலத்தையும் பத்திரமா பாத்துக்கங்க
Rate this:
raja - Cotonou,பெனின்
23-மே-202213:04:35 IST Report Abuse
rajaபயப்படாந்தீங்க... இவங்க ஒன்னும் நிலா அபகரிப்பில் ஈடுபட கேடுகெட்ட திருட்டு திராவிட ஓங்கோல் கூட்டம் இல்லை என்று வரலாறு சொல்கிறதே..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X