காடா துணி உற்பத்தி 15 நாள் நிறுத்தம்; 'பேண்டேஜ்' துணி உற்பத்தியும் பாதிப்பு

Updated : மே 23, 2022 | Added : மே 23, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
பல்லடம்: காடா துணி உற்பத்தி நிறுத்த போராட்டம் காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பஞ்சு, நுால் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் நேற்று முதல் 15 நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.துணி உற்பத்தி சார்ந்த விசைத்தறி, ஸ்பின்னிங் உள்ளிட்டவற்றை

பல்லடம்: காடா துணி உற்பத்தி நிறுத்த போராட்டம் காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பஞ்சு, நுால் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் நேற்று முதல் 15 நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.துணி உற்பத்தி சார்ந்த விசைத்தறி, ஸ்பின்னிங் உள்ளிட்டவற்றை சார்ந்து, பல லட்சம் தொழிலாளர்கள் பஞ்சு விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.latest tamil news
பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது:
பஞ்சு பதுக்கல், பஞ்சு, நுால் ஏற்றுமதிக்கு தடை விதித்தல், நுால் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, திருப்பூர் தொழில் துறையுடன் இணைந்து கடந்த, 16, 17ல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினோம்.

நுால் விலை உயர்வால், ஏற்கனவே 50 சதவீத உற்பத்தி மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து நுால் விலை அதிகரித்து வருவதால், மீண்டும் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்தோம். இதனால், தினசரி 20 கோடி ரூபாய் மதிப்பிலான, 1 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.ஏற்றுமதி மற்றும் துணி விற்பனை பாதிப்பால், தொழில் மேற்கொள்ள இயலாத சூழல் உள்ளது.

கோடிகளில் முதலீடு செய்து, தற்போது வங்கி கடன்களை செலுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.உற்பத்தி நிறுத்தம் காரணமாக, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் உள்ளது.ஒட்டுமொத்த தொழில் துறையினரின் கோரிக்கையை ஏற்று, மத்திய, மாநில அரசுகள், நுால் விலையை கட்டுப்படுத்தவும், பஞ்சு, நுால் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news

'பேண்டேஜ்' துணி உற்பத்தியும் பாதிப்புவிருதுநகர் மாவட்டம், சத்திரப்பட்டி மற்றும் சுற்றியுள்ள சங்கரபாண்டியபுரம், சமுசிகாபுரம் பகுதிகளில், 'பேண்டேஜ்' எனப்படும் மருத்துவ பயன்பாட்டு துணி உற்பத்தி செய்யப்படும் தொழிலில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.நுால் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி அத்துறையினரும், பிற உபதொழில் துறையினரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் நாள் ஒன்றுக்கு 1 கோடி ரூபாய் வரை உற்பத்தி பாதிப்பு, தொழிலாளர்களுக்கு 30 லட்சம் ரூபாய் வரை ஊதிய இழப்பு ஏற்படும்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
23-மே-202213:11:24 IST Report Abuse
Ramesh Sargam ஜவுளி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளை செவிமடுத்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு ஒரு பரிகாரம் தேட முற்படாமல், ஊட்டி மலர் காட்சியை பார்ப்பதும், பேரறிவாளனுக்கு விருந்து வைப்பதும், நரிக்குறவர்கள், குருவிக்கார்கள் உடன் படம் எதுத்துக்கொள்வதும், என்று தேவையே இல்லாத செயல்களில் முதல்வர் அதிகம் விருப்பம் காட்டுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
Rate this:
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
23-மே-202214:27:50 IST Report Abuse
Rajஇது ஜப்பான் போயிருக்கும் மோடி செய்யவேண்டிய வேலை...
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
23-மே-202212:17:59 IST Report Abuse
Raj பஞ்சு விலை உயர்வு குறித்து மோடியிடம் பேசி நடவடிக்கை எடுக்க செய்வேன் என கூறிய அண்ணாமலை என்ன ஆனார்?
Rate this:
Cancel
M senthilkumar - Devakottai,இந்தியா
23-மே-202211:31:11 IST Report Abuse
M senthilkumar மத்திய மாநில அரசுகளுக்கு தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்கள் வளர்ச்சிக்கு தேவையானதை செய்வதை விட்டுவிட்டு வேறு என்ன வேலை செய்கிறார்கள் என்றே தெரியவில்லை மேலும் தேர்தல் நடத்துவதை ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை என்பதை மூன்று ஆண்டுக்கு ஒரு முறை என்று மாற்றி அமைக்க வேண்டும் அப்பொழுது தான் பதவி ஆசை மற்றும் ஊழல் நடை பெறுவதை தடுக்க முடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X