டில்லியை புரட்டிப்போட்ட சூறைக்காற்று: போக்குவரத்து, விமான சேவை பாதிப்பு

Updated : மே 23, 2022 | Added : மே 23, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: டில்லியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்ததில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழையால் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.டில்லியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்த நிலையில் இன்று திடீரென வானிலை மாற்றமடைந்து அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்திய வானிலை ஆய்வு மையம்
Heavy Rains, Thunderstorms, Delhi, Disrupt, Flight Operations

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்ததில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழையால் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்த நிலையில் இன்று திடீரென வானிலை மாற்றமடைந்து அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் டில்லியில் மணிக்கு 60 முதல் 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, கனமழையால் டில்லியில் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் சாலை போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.


latest tamil news


அத்துடன் சில இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், டில்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 40க்கும் மேற்பட்ட விமானங்கள் கால தாமதமாக புறப்படும் எனவும், தரையிறங்க வேண்டிய 18 விமானங்கள் தாமதமாக தரையிறங்கியதாகவும் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கனமழையால் இரண்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
23-மே-202216:32:09 IST Report Abuse
DVRR சனிக்கிழமை ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு காரில் வந்து கொண்டிருந்தபோது வழி நெடுக ரோட்டில் குப்பை குப்பை குப்பை மற்றும் அங்கும் இங்கும் ஸ்டீல் ரோடு Dividers பரந்து கிடந்தது ஒரு இடத்தில் மரம் முறிந்து விழுந்து 30 மீட்டர் வரும் போகும் ரோடை அடைத்து ஒரே களேபரம், தற்காலிகமாக ஒரு ரோடை அடைத்து எதிர் ரோட்டில் மரத்தை சிறிது வெட்டி வலி செய்திருந்தார்கள். மாலை 4.17 மணிக்கு நான் செல்லும் போது திடீர் என்று ஒரே இருட்டு ஏதோ இரவு 12 மணி போல
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
23-மே-202214:20:52 IST Report Abuse
Tamilan நீண்ட வெப்பத்திற்கு பின் வந்த மழையும் சூறாவளியோடுதான் வந்தது எதனால் என்பதை விஞ்சானிகள் விளக்கி தங்கள் மற்றும் ஆட்சியாளர்களின் வாழ்நாள் தவறுகளுக்கு சப்பைக்கட்டு கட்டவேண்டும் .
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
23-மே-202219:33:19 IST Report Abuse
madhavan rajanடில்லியில் இது ஐம்பது ஆண்டு காலமாக நடைபெறுகிறது. ஆந்தி என்று ஒரு சூறைக்காற்று வெயில் அதிகமாகும்போது எப்போதும் வரும். ஒருமுறை ஒரு பஸ் மரத்தின்மேலே தொங்கிக்கொண்டிருந்தது. குப்பை கூளங்களுடன் சூழல் காற்று வீசும். சில போக்குவரத்து தடங்களில் மக்கள் பஸ்சிலிருந்து இறங்கி பல கிலோமீட்டர்கள் சாலையில் தேங்கியிருக்கும் தண்ணீரில் நடந்தே செல்லவேண்டியிருக்கும். இதெல்லாம் தில்லியில் சகஜமாக நடப்பதுதான்....
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
23-மே-202214:02:19 IST Report Abuse
Tamilan மோடியையும் மோடி கும்பலையும் நாடுகடத்தினாலதான் நாட்டில் மலை கூட எட்டிப்பார்க்கிறது . இவர்கள் நாட்டில் இருக்கும்வரை நாட்டை வளர்ந்த நாடுகள், மற்ற மதவாத நாடுகளைப்போல் காடாக மாற்றி விடுவார்கள் .
Rate this:
தமிழன் - Madurai,இந்தியா
23-மே-202220:03:25 IST Report Abuse
தமிழன்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X