" இலங்கையின் மூத்த சகோதரர் இந்தியா " - நன்றி தெரிவித்த நமல் ராஜபக்சே

Updated : மே 23, 2022 | Added : மே 23, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
கொழும்பு: இலங்கைக்கு இந்தியா அளிக்கும் உதவி குறித்து அந்நாட்டு முன்னாள் அமைச்சர் நமல் ராஜபக்சே, பல ஆண்டுகளாக இலங்கையின் மூத்த சகோதரராகவும், நல்ல நண்பராகவும் இந்தியா இருந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு, பல தவணைகளில், 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இது தவிர பல ஆயிரம் கோடி ரூபாய்
India, Big Brother, Sri Lanka, Namal Rajapaksa, Thanks, Humanitarian Aid, இந்தியா, மூத்த சகோதரர், இலங்கை, நமல் ராஜபக்சே

கொழும்பு: இலங்கைக்கு இந்தியா அளிக்கும் உதவி குறித்து அந்நாட்டு முன்னாள் அமைச்சர் நமல் ராஜபக்சே, பல ஆண்டுகளாக இலங்கையின் மூத்த சகோதரராகவும், நல்ல நண்பராகவும் இந்தியா இருந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு, பல தவணைகளில், 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இது தவிர பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு அரிசி, மருந்துகள் உள்ளிட்டவை மானியமாக வழங்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழக அரசின், 90 லட்சம் கிலோ அரிசி, 20 ஆயிரம் கிலோ பால் பவுடர், 25 ஆயிரம் கிலோ மருந்துகள் மற்றும் இதர மருத்துவப் பொருட்களுடன் சென்ற கப்பல், நேற்று கொழும்பு துறைமுகத்தை அடைந்தது.


latest tamil news



இந்தியாவின் சார்பில் அளிக்கப்படும் உதவிகள் குறித்து முன்னாள் அமைச்சர் நமல் ராஜபக்சே தெரிவித்ததாவது: இலங்கைக்கு அத்தியாவசிய பொருள்கள், நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் இந்திய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பல ஆண்டுகளாக இலங்கையின் மூத்த சகோதரராகவும், நல்ல நண்பராகவும் இந்தியா இருந்து வருகிறது. இதை எங்களால் மறக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆதிகுடி கொற்கை அப்ப சமீரா ரெட்டி உங்க அண்ணன் பொண்ணா??
Rate this:
Cancel
ranjani - san diego,யூ.எஸ்.ஏ
23-மே-202221:24:54 IST Report Abuse
ranjani உதவிகள் பெற்றுக்கொண்டு பின்னர் முதுகில் குத்துவதை தொடர்ந்து செய்வோம்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
23-மே-202221:14:58 IST Report Abuse
Ramesh Sargam தேவைப்படும்போது இந்தியா மூத்த சகோதரர். காரியம் ஆனவுடன் மீண்டும் சீனாவுடன் மீண்டும் உறவா...?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X