ரஷ்ய வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்த உக்ரைன்

Updated : மே 23, 2022 | Added : மே 23, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தொடுத்துவரும் நிலையில், ரஷ்ய வீரர் ஒருவரை போர்க்குற்றவாளியாக கைது செய்துள்ள உக்ரைன், அவ்வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரின்போது, 21 வயதான ரஷ்ய ராணுவ வீரர் வாடிம் ஷிஷிமரின், உக்ரைனை சேர்ந்த 62 வயது மூதாட்டியை கொன்றதாக போர் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். மேலும், அவர் வடகிழக்கில் உள்ள சுமி
Russian Soldier, Life Sentence, Ukraine, Conflict, First War Crimes Trial,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தொடுத்துவரும் நிலையில், ரஷ்ய வீரர் ஒருவரை போர்க்குற்றவாளியாக கைது செய்துள்ள உக்ரைன், அவ்வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரின்போது, 21 வயதான ரஷ்ய ராணுவ வீரர் வாடிம் ஷிஷிமரின், உக்ரைனை சேர்ந்த 62 வயது மூதாட்டியை கொன்றதாக போர் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். மேலும், அவர் வடகிழக்கில் உள்ள சுமி பகுதியில் ஒரு கிராமத்தில் உக்ரைன் குடிமகனை தலையில் சுட்டுக் கொன்றுள்ளார். தன் மீதான அழுத்தத்தின் காரணமாக அவ்வாறு செய்துவிட்டதாக ஒப்புக்கொண்ட ஷிஷிமரின், அனைத்து தண்டனை நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.


latest tamil news


இந்த நிலையில் ரஷ்ய - உக்ரைன் போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள நீதிபதிகள் குழு, போர்க்குற்ற விசாரணையில் இன்று (மே 23) தீர்ப்பு வழங்கியது. அதன்படி, போர்க் குற்றங்களுக்கான முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட வாடிம் ஷிஷிமரின்க்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
visu - Pondicherry,இந்தியா
23-மே-202221:34:59 IST Report Abuse
visu உக்ரைன் தவறான பிரசாரம் செய்து வருகிறது .இவளவு விரைவாக தீர்ப்பு போர் தொடங்கிய 75. நாள்தான் ஏன் ரஷ்யா இவளவு தாமதம் என்று தெரியவில்லை . தேவையில்லாத போர் அவர்கள் nato. வில் சேரக்கூடாது என்று சொன்னார்கள் அதை சிலநாட்களுக்கு பின் உக்ரைனும் ஏற்று கொண்டது ஆனால் திமிர் பேசினால் போர் நடக்கிறது
Rate this:
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
23-மே-202220:54:55 IST Report Abuse
N.K அதுவரையில் உக்ரைன் இருக்குமா? ரஷ்யா வீரர்கள் மன அழுத்தத்தில் இருப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் பிரச்சாரங்கள் செய்துவருகின்றன
Rate this:
Cancel
தமிழன் - Madurai,இந்தியா
23-மே-202219:56:25 IST Report Abuse
தமிழன் 21 வயசு. அவன் புத்தி எப்பிடியெல்லாம் இருக்கும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X