அறிவியல் ஆயிரம்: தண்ணீரில் பிரதிபலிப்பு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்: தண்ணீரில் பிரதிபலிப்பு

Added : மே 23, 2022 | |
கண்ணாடி போல தண்ணீரில் நம் முகம் பிரதிபலிப்பதை பார்க்கிறோம். குறிப்பிட்ட ஊடகத்தில் இருந்து அடர்த்தி மாறுபட்ட வேறு ஊடகத்துக்குள் ஒளி பாயும்போது, அதில் ஒரு பகுதி பிரதிபலிக்கும். ஒளி ஊடுருவும் ஜன்னல் கண்ணாடியில்கூட சில சமயம் பிம்பம் பிரதிபலிக்கும். நீர்நிலையானது மிக தெளிவாக சலனம் இல்லாமல் இருந்தால், அதிலிருந்து பிரதிபலிக்கும் ஒளிக்கற்றைகள் குவிந்து இருக்கும். எனவே
அறிவியல் ஆயிரம்: தண்ணீரில் பிரதிபலிப்பு

கண்ணாடி போல தண்ணீரில் நம் முகம் பிரதிபலிப்பதை பார்க்கிறோம். குறிப்பிட்ட ஊடகத்தில் இருந்து அடர்த்தி மாறுபட்ட வேறு ஊடகத்துக்குள் ஒளி பாயும்போது, அதில் ஒரு பகுதி பிரதிபலிக்கும். ஒளி ஊடுருவும் ஜன்னல் கண்ணாடியில்கூட சில சமயம் பிம்பம் பிரதிபலிக்கும். நீர்நிலையானது மிக தெளிவாக சலனம் இல்லாமல் இருந்தால், அதிலிருந்து பிரதிபலிக்கும் ஒளிக்கற்றைகள் குவிந்து இருக்கும். எனவே கண்ணாடிபோல நீரிலும் பிம்பம் தென்படும். சாதாரணமாக ஒளி பிரதிபலிப்பின் மூலமே இந்தப் பிம்பங்கள் உண்டாகின்றன.




தகவல் சுரங்கம்: சகோதரர்கள் தினம்


சகோதரர்களுக்குள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக மே 24ல் சகோதரர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2005ல் அமெரிக்காவில் இத்தினம் தொடங்கப்பட்டாலும் பல்வேறு நாடுகளிலும் கடைபிடிக்கப்படுகிறது. சின்ன சின்ன சண்டைகள் இருந்தாலும், உடன்பிறந்தவருக்கு ஒரு பிரச்னை என வந்துவிட்டால் அண்ணன் - தம்பி ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பர். 'தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' என்பார்கள். உடன் பிறந்த சகோதரர்கள் இல்லையென்றாலும், அவர்களுக்கு உறவினர், நண்பர்களிடம் இருந்து சிலர் சகோதரர்கள் போல இருப்பார்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X