டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 23, 2022 | கருத்துகள் (3) | |
த.மா.கா., தலைவர் வாசன்: ராஜிவ் நினைவு நாளன்று, அவரது கொலையாளிகள் ஆறு பேரை விடுவிப்பது குறித்து, சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் ஆலோசித்திருப்பது தேவையற்றது. இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது. தமிழகத்தில் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல், இதுபோன்ற ஆலோசனை நடத்தியிருப்பது தேவையற்றது. தமிழக மக்கள் வெறுக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.டவுட் தனபாலு:
'டவுட்' தனபாலு

த.மா.கா., தலைவர் வாசன்: ராஜிவ் நினைவு நாளன்று, அவரது கொலையாளிகள் ஆறு பேரை விடுவிப்பது குறித்து, சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் ஆலோசித்திருப்பது தேவையற்றது. இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது. தமிழகத்தில் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல், இதுபோன்ற ஆலோசனை நடத்தியிருப்பது தேவையற்றது. தமிழக மக்கள் வெறுக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

டவுட் தனபாலு: இப்ப, நீங்க காங்கிரசில் இருந்து வெளியேறி தனிக்குடித்தனம் போயிட்டாலும், ராஜிவ் மீதான உங்களின் அன்பு என்றும் மாறாது என்பதை புரிஞ்சுக்க முடியுது... 'தானாடா விட்டாலும், தசையாடும்' என்பதும் உங்க விஷயத்துல, 'டவுட்'டே இல்லாம நிரூபிக்கப்பட்டுள்ளது!

***

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: தமிழக அரசுக்கு, 72 மணி நேரம் கொடுக்கிறோம். அதற்குள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும். பெட்ரோலுக்கு 5, டீசலுக்கு 4 ரூபாய் மற்றும் சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைக்க வேண்டும். குறைக்கவில்லை எனில், பா.ஜ., தொண்டர்கள் கோட்டையை முற்றுகையிட்டு, வாக்குறுதியை செயல்படுத்த வைப்போம்.

டவுட் தனபாலு: உங்க எச்சரிக்கைக்கு மாநில அரசு பணியுதோ, இல்லையோ... ஆனா, வளவளா, கொழகொழான்னு வெண்டைக்காயை விளக்கெண்ணெயில் வதக்கிய மாதிரி, அரசியல் நடத்திட்டு இருக்கிற எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில, 'வெட்டு ஒண்ணு; துண்டு ரெண்டு'ன்னு அரசியல் பண்ற நீங்க வித்தியாசமானவர் என்பதில், 'டவுட்'டே இல்லை!

***

ஜி.எஸ்.டி., அதிகாரிகள்: சென்னை கிண்டி மற்றும் ஊட்டியில் செயல்பட்டு வரும், 'மெட்ராஸ் ரேஸ் கிளப்' ஐந்து ஆண்டுகளாக, ஜி.எஸ்.டி.,யை செலுத்தவில்லை. இதனால், 250 கோடி ரூபாய் வரை வரி நிலுவை உள்ளது. பலமுறை, 'நோட்டீஸ்' அளித்தும் பலன் இல்லை. எனவே, வரி வருவாய் இழப்பு ஏற்படுவதை தடுக்க, உடனடியாக, 250 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி.,யை செலுத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

டவுட் தனபாலு: ஏன் இவ்வளவு பணிவு, கரிசனம்...? நான்கு மாதம் வாடகை கொடுக்கலைன்னாலே வீட்டை காலி பண்ணச் சொல்லிடுவாங்க... ஐந்து வருடம் வரி கட்டாத நிறுவனத்திடம் இருக்கும் இடத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்யத் தயங்குவது ஏன் என்பது தான், 'டவுட்!'

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X