சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'கலெக்டரும் இப்படி களமிறங்கிட்டாரே!'

Added : மே 23, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கலெக்டர் முருகேஷ் தலைமையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. அப்போது, விவசாயிகள் சிலர், பஞ்சமி நிலம் மற்றும் பட்டா மாற்றம் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்தனர். உடன், கலெக்டர் குறுக்கிட்டு, 'இங்கு விவசாயம் சார்ந்த குறைகளை மட்டும் பேச வேண்டும்' என்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், கலெக்டருக்கு எதிராக
'கலெக்டரும் இப்படி களமிறங்கிட்டாரே!'

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கலெக்டர் முருகேஷ் தலைமையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. அப்போது, விவசாயிகள் சிலர், பஞ்சமி நிலம் மற்றும் பட்டா மாற்றம் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்தனர்.

உடன், கலெக்டர் குறுக்கிட்டு, 'இங்கு விவசாயம் சார்ந்த குறைகளை மட்டும் பேச வேண்டும்' என்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், கலெக்டருக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி வெளிநடப்பு செய்தனர்.

அதிருப்தியடைந்த கலெக்டர் முருகேஷும் வெளிநடப்பு செய்தார். அதிகாரிகள் மற்றும் போலீசார், விவசாயிகளையும், கலெக்டரையும் சமாதானப்படுத்தி, கூட்டம் சுமுகமாக நடக்க ஏற்பாடு செய்தனர்.

மூத்த நிருபர் ஒருவர், 'குறைதீர் கூட்டத்திற்கு வந்தாலே, மாமியார் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை போல, விவசாயிகள் தான் எப்பவுமே கோவிச்சிக்கிட்டு போவாங்க... இப்ப, கலெக்டரும் இப்படி களமிறங்கிட்டாரே...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sethusubramaniam - chennai,இந்தியா
24-மே-202219:13:56 IST Report Abuse
sethusubramaniam அவராலே பதில் சொல்ல முடியாத கேள்வியெல்லாம் கேட்டா கலெக்டருக்கு கோவம் வராமே என்ன செய்யும். இது ரெகார்டுக்காக நடக்கற கூட்டமுன்னு தெரியுமே . அப்புறம் ஏன் விவசாயிகள் பிரச்சினை பண்ணனும். அவங்க தப்புதான்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
24-மே-202218:05:53 IST Report Abuse
D.Ambujavalli பபின்னே , 'மேலிடத்துக்கு' பிடிக்காத சப்ஜெக்டை விவசாயி பேச, இவர் பதில் ஏதாவது கூறி, வில்லங்கம் விளைவதைவிட வெளிநடப்பே பரவாயில்லைதானே பிழைக்காத தெரிந்தவர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X