காங்., - எம்.எல்.ஏ., மீது கடுப்பில் தி.மு.க.,வினர்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

காங்., - எம்.எல்.ஏ., மீது கடுப்பில் தி.மு.க.,வினர்!

Added : மே 23, 2022 | கருத்துகள் (3) | |
''காலியிடங்களை எப்ப நிரப்ப போறாங்கன்னு தெரியலைங்க...'' என்றபடியே வந்தார், அந்தோணிசாமி.''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''தமிழகத்துல, 250க்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் காலியா இருக்குது... இதுல, 117 பணியிடங்களை நிரப்ப, போன வருஷம் செப்டம்பர்ல, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டதுங்க... ''டிசம்பர்ல எழுத்து தேர்வு
காங்., - எம்.எல்.ஏ., மீது கடுப்பில் தி.மு.க.,வினர்!

''காலியிடங்களை எப்ப நிரப்ப போறாங்கன்னு தெரியலைங்க...'' என்றபடியே வந்தார், அந்தோணிசாமி.''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''தமிழகத்துல, 250க்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் காலியா இருக்குது... இதுல, 117 பணியிடங்களை நிரப்ப, போன வருஷம் செப்டம்பர்ல, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டதுங்க... ''டிசம்பர்ல எழுத்து தேர்வு நடத்துறதா அறிவிச்சு, இதுவரைக்கும் அதற்கான அறிகுறியே இல்லைங்க...''இதுக்கு இடையில, உணவு பாதுகாப்பு அலுவலர் பற்றாக்குறையால, பிரபல சுற்றுலா தலங்கள், பிரசித்தி பெற்ற கோவில்கள் இருக்கிற ஊர்கள்ல, உணவுகளின் தரம் படுமோசமா இருக்குது... கலப்பட உணவுகளும் நிறைய அளவுல விற்பனை ஆகுது... ''பெரிய அளவுல அசம்பாவிதங்கள் நடக்கிறதுக்கு முன்னாடி, அலுவலர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்தா நல்லதுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.''இடதுசாரிகள் கோட்டையில, காங்கிரஸ் பிரமுகர் மோதப் போயிருக்காரு பா...'' என அடுத்த மேட்டருக்கு நகர்ந்தார், அன்வர்பாய்.''அதான், ரெண்டு பேரும் ஒரே கூட்டணியில இருக்காவளே...'' என்றார், அண்ணாச்சி.''நான் சொல்றது, கேரளாவுல... அந்த மாநிலத்தின் திரிக்கக்கரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., தாமஸ் காலமாகிட்டதால, வர்ற 31ம் தேதி இடைத்தேர்தல் நடக்குது பா... ''காங்கிரஸ்ல, தாமஸ் மனைவி உமாவும், மா.கம்யூ., சார்புல ஜோமன் ஜோசப், பா.ஜ., சார்புல ராதாகிருஷ்ணன்னு ஒருத்தரும் போட்டியிடுறாங்க.. இதுல, கிறிஸ்துவர்களான உமா - ஜோசப் இடையில தான் கடும் போட்டி நிலவுது பா...''இந்த தேர்தலுக்கு, கேரள காங்கிரஸ் மேலிட பார்வையாளரும், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.,யுமான விஸ்வநாதன் தலைமையில தேர்தல் பணிக்குழு அமைச்சிருக்காங்க... ''இவர், '25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்துல காங்., வேட்பாளரை ஜெயிக்க வச்சு காட்டுறோம்'னு டில்லி மேலிடத்திடம் சபதம் செஞ்சுட்டு, ஆதரவாளர்கள் பட்டாளத்தோட அங்க முகாம் இட்டிருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.''இடதுசாரிகள், அவ்வளவு சுலபமா ஜெயிக்க விட்டுடுவாளா...'' என்ற குப்பண்ணாவே, ''காங்., குடைச்சலால, தி.மு.க., தரப்பு, 'டென்ஷன்'ல இருக்கு ஓய்...'' என்றார்.''பேரறிவாளன் விடுதலை விவகாரம் தான வே...'' என்றார், அண்ணாச்சி.''அதைத்தான் தி.மு.க.,காரா சட்டையே செய்யலையே... ஈரோடு மாநகராட்சி நேதாஜி காய்கறி, பழ மார்க்கெட் குத்தகையை, மாவட்ட அமைச்சர் முத்துசாமி, கமிஷனர் ஆதரவோட, 2.15 கோடி ரூபாய்க்கு தி.மு.க.,வினர் ஏலம் எடுத்தா ஓய்... ''ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., திருமகன் ஈ.வெ.ரா., '10 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் மார்க்கெட்டை, 2.15 கோடிக்கு ஏன் தரணும்... ''மாநகராட்சியே நடத்த வேண்டியது தானே'ன்னு கேட்டு, கமிஷனர், கலெக்டர், அமைச்சர், அரசுக்கு கடிதம் அனுப்பிட்டார் ஓய்...''இதனால, அவர் மேல தி.மு.க.,வினர் கடுப்புல இருக்கா... அதே நேரம், 2.15 கோடி ஏலத்துல, மாநகர்ல இருக்கற, 10க்கும் மேற்பட்ட வாரச்சந்தைகளும் வர்றதா சொல்லி, அங்கயும் தி.மு.க.,வினர் வசூலை வாரிண்டு இருக்கா... ''அமைச்சர் தரப்பு, மேயரின் கணவரான மாநகர செயலர் ஆதரவு இருக்கறதால, அவா காட்டுல மழை பொழியறது ஓய்...'' என்றார், குப்பண்ணா. அரட்டை முடிய, அனைவரும் நகர்ந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X