77 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை கோடை காலத்தில் திறப்பு

Updated : மே 24, 2022 | Added : மே 23, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருப்பதால், வழக்கமாக ஜூன், 12ல் திறக்கப்படும் அணை, முன்னதாக, நாளை(மே 24) திறக்கப்படுகிறது. அணையில் இருந்து தண்ணீரை, முதல்வர் ஸ்டாலின் டெல்டா பாசனத்துக்கு திறக்கிறார்.மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., ஆண்டுதோறும் ஜூன், 12ல் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். இதற்கு, 90 அடிக்கு மேல்
மேட்டூர், அணை, கோடைகாலம், திறப்பு, பாசனம், 77 ஆண்டுகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருப்பதால், வழக்கமாக ஜூன், 12ல் திறக்கப்படும் அணை, முன்னதாக, நாளை(மே 24) திறக்கப்படுகிறது. அணையில் இருந்து தண்ணீரை, முதல்வர் ஸ்டாலின் டெல்டா பாசனத்துக்கு திறக்கிறார்.

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., ஆண்டுதோறும் ஜூன், 12ல் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். இதற்கு, 90 அடிக்கு மேல் நீர்மட்டம் இருக்க வேண்டும் என்பதால், பல ஆண்டுகளில், குறிப்பிட்ட நாளில் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், 2020, 2021ல் நீர்மட்டம் அதிகளவில் இருந்ததால், ஜூன், 12ல் திறக்கப்பட்டது. 2021ல், தொடர்ந்து, 231 நாள் திறக்கப்பட்டு, ஜன., 28ல் மூடப்பட்டது.

கடந்த ஆண்டு பரவலாக பெய்த மழையால், தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தும் போது கூட, 109 அடி, நீர் இருப்பு இருந்தது. பின், குடிநீர் தேவைக்கு மட்டும் குறைவாக நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில நாளாக, கர்நாடகா மாநிலத்திலும், ஒகேனக்கல் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பெய்த கனமழையால், அணைக்கு நீர்வரத்து, 'கிடுகிடு'வென அதிகரித்துள்ளது. கடந்த 21ல், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 36 ஆயிரம் கன அடியாக இருந்தது. மழை சற்று குறைந்ததால், நீர்வரத்து படிப்படியாக குறைந்து, நேற்று, 12 ஆயிரத்து, 777 கனஅடியாக வந்து கொண்டிருந்தது.


latest tamil news



அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக மட்டும், 1,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று மாலை நீர்மட்டம், 117.28 அடியை எட்டியது; நீர் இருப்பு, 89.19 டி.எம்.சி.,யாக இருந்தது. இதே நிலையில் நீர் வரத்து இருந்தால், ஒரு வாரத்தில் அணை நீர்மட்டம், 120 அடியை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அணை கட்டி, 89 ஆண்டுகளில், இதுவரை, 41 முறை நிரம்பியுள்ளது. விரைவில், 42வது முறை அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், டெல்டா பாசனத்துக்கு வழக்கத்தை விட மிக முன்னதாக, நாளை மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நாளை காலை, 10:00 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின், மேட்டூர் வந்து, அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கிறார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் நேரு உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-மே-202208:34:02 IST Report Abuse
ஆரூர் ரங் காவிரி வறண்டு டெல்டா நாசமானது திமுக காங்கிரஸ் கூட்டாளிகள் வேலையால்தான். இப்போ தானாக😉 வந்த வெள்ளத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலை நடக்கிறது. இதற்கு பதில் தூர் வாராமல் கிடக்கும் 80 சதவீத வாய்க்கால்களையும் மணல் திருட்டு காரணமான ஆற்றையும் கவனிக்கலாம். விவசாய வேலைக்கு ஆள் பற்றாக்குறை. காரணம் இளைஞர்கள் டாஸ்மாக்கே கதி என்று இருப்பதால். இன்னும் நான்காண்டுகளில் டெல்டா விவசாயம் இருக்காது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
23-மே-202220:50:57 IST Report Abuse
Ramesh Sargam சிறந்த முடிவு. ஊருக்கே உணவளிக்கும் விவசாயிகளின் பிரச்சினை தண்ணீர். அது அவர்களுக்கு தேவைப்படும்போது திறந்து விட்ட மாநில முதல்வருக்கு நன்றி. இதுபோன்று மற்ற மக்கள் பிரச்சினைகளையும் அவர் தீர்த்தால்.... எவ்வளவு நன்றாக இருக்கும்.
Rate this:
Girija - Chennai,இந்தியா
23-மே-202222:38:52 IST Report Abuse
Girijaபோடாதே தப்பு கணக்கு...
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
23-மே-202220:23:02 IST Report Abuse
Dhurvesh ஸ்டாலினுக்கு கட்டம் சரி இல்லை இப்போ என்ன சொல்லுவாங்கல் / 60 வருடம் முடியாததை முடித்து காட்டியவர் தான் ஸ்டாலின்
Rate this:
24-மே-202208:35:52 IST Report Abuse
ஆரூர் ரங்ஆமாம் சுடால் தான் கர்நாடகா கேரள மழை வெள்ளத்துக்குக் காரணம்🙃...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X