'கேன்ஸ்' திரைப்பட விழாவில் அசத்திய தமிழ் திரைப்படம்

Updated : மே 24, 2022 | Added : மே 23, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி: தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம், 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.ஐரோப்பிய நாடான, பிரான்சில் 75வது கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் பல நாட்டு திரைப் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. தமிழ் திரைப்பட உலகில் இருந்தும் பல நடிகர்கள்,
Cannes 2022,Iravin Nizhal,Parthiban

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம், 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஐரோப்பிய நாடான, பிரான்சில் 75வது கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் பல நாட்டு திரைப் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. தமிழ் திரைப்பட உலகில் இருந்தும் பல நடிகர்கள், படைப்பாளிகள் கேன்ஸ் சென்றுள்ளனர். இந்நிலையில், நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி, நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படம், கேன்ஸ் விழாவில் நேற்று(மே 22) திரையிடப்பட்டது. மொத்தம் 100 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் முழுவதும் ஒரே, 'ஷாட்'டில் எடுத்து முடிக்கப்பட்டது.


latest tamil news


இதற்காக, 64 ஏக்கர் நிலத்தில் 50க்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டு, 90 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இத்திரைப்படம் கேன்ஸ் விழாவில் நேற்று திரையிடப்பட்டது. 'நான்லீனியர்' எனப்படும், சம்பவங்கள் முன் பின் மாறி, மாறி நிகழும் திரைக்கதையை ஒரே ஷாட்டில் எடுத்துள்ளதை கண்டு சர்வதேச திரைக்கலைஞர்கள் திகைத்து, ஆச்சரியம் அடைந்தனர். இரவின் நிழல் திரைப்படம், கேன்ஸ் விழாவில் சிறப்பு கவனம் பெற்றுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nizamudin - trichy,இந்தியா
24-மே-202207:19:35 IST Report Abuse
nizamudin வாழ்த்துக்கள் பார்த்திபன்
Rate this:
Cancel
24-மே-202203:10:49 IST Report Abuse
அக்கப்போர் ஹே சும்மா வெத்து பில்டப் வேண்டாம். அதுவும் வெளிநாடு கலைஞாகள் அதிர்ந்து பூடங்களாம். யாப்பா உங்க பல்டப்புக்கு ஒரு அளவே இல்லையா... கான்ஸ் பெஸ்டிவலில் எங்கயாவது ஒரு ஓரமா ஒட்டியிருபங்க இந்த படத்த...தமிழ் நாட்டிலுள்ள வந்து ஒரு சத்தம் போட வேண்டியது.
Rate this:
Cancel
P. Senthil -  ( Posted via: Dinamalar Android App )
24-மே-202200:08:53 IST Report Abuse
P. Senthil ஏன் 90 நாள் என்றால் படம் எடுத்து சென்று இருக்கும் போது ஒரு காட்சி சரியாக அமையவில்லை என்றால் மீண்டும் முதல் காட்சியில் இருந்து எடுக்கப்பட்டது அப்படி பல முறை முயற்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X