வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கேன்பெரா : ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக, அந்தோனி ஆல்பேன்ஸ் பதவி ஏற்றார்.
ஆஸ்திரேலிய பார்லிமென்ட் தேர்தல், சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த, 'கன்சர்வேட்டிவ்' கூட்டணி அரசு தோல்வி அடைந்தது. இதையடுத்து, பிரதமர் ஸ்காட் மோரீசன் பதவி விலகினார்.

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தொழிலாளர் கட்சியை சேர்ந்த அந்தோனி ஆல்பேன்ஸ், புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜப்பானில் நாளை நடக்கவுள்ள 'குவாட்' பாதுகாப்பு மாநாட்டில், புதிய பிரதமர் ஆல்பேன்ஸ் பங்கேற்க வேண்டி இருப்பதால், அவரும், புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வாங்கும், இன்று(மே 23) பதவி ஏற்றனர். அவர்களுக்கு, கவர்னர் ஜெனரல் டேவிட் ஹியூர்லி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
துணை பிரதமராக ரிச்சர்ட் மார்ல்ஸ் பதவி ஏற்றார். ஆல்பேன்சின் ஜப்பான் பயணத்தின் போது, இவர் பிரதமராக பொறுப்பு வகிப்பார். ஜப்பானில் நாளை நடக்கும் குவாட் மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நம் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோருடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி ஆல்பேன்ஸ் பங்கேற்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE