காய்கறி விலை கிலோவிற்கு ரூ.10 சரிவு: பெட்ரோல், டீசல் விலை குறைவு எதிரொலி

Updated : மே 24, 2022 | Added : மே 23, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
கோயம்பேடு: பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதன் எதிரொலியாக, கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை, கிலோவிற்கு 5 முதல்- 10 ரூபாய் வரை குறைந்துள்ளது.சென்னை, கோயம்பேடு சந்தைக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இதில், மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக,
vegetables, Fuel, Petrol, Diesel

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோயம்பேடு: பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதன் எதிரொலியாக, கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை, கிலோவிற்கு 5 முதல்- 10 ரூபாய் வரை குறைந்துள்ளது.

சென்னை, கோயம்பேடு சந்தைக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இதில், மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக, கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைந்து, அதன் விலை 100 ரூபாயை கடந்து உச்சத்தில் சென்றது. இதனால் இல்லத்தரசியர் கடும் அவதியடைந்து வந்தனர்.


latest tamil news


இந்த நிலையில், பெட்ரோல் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்ததால், அனைத்து காய்கறிகளின் விலை கிலோவிற்கு, 5 -- 15 ரூபாய் குறைந்துள்ளது. இதில், தொடர்ந்து உச்சத்தில் உள்ள தக்காளி விலையும் சற்று குறைந்துள்ளது. தக்காளி வரத்து குறைவு காரணமாக, நேற்று 1 கிலோ நாட்டு தக்காளி மொத்த விற்பனையில் 90 -- 95 ரூபாய்க்கும், நவீன் தக்காளி, 100 ரூபாய்க்கும் விற்பனையானது.

பெட்ரோல் டீசல் விலை குறைவால், இன்று 1 கிலோ நாட்டு தக்காளி மொத்த விற்பனையில் 80 -- 90 ரூபாய்க்கும், நவீன் தக்காளி, 95 ரூபாய்க்கும் விற்பனையானது. இதேபோல், நேற்று 110 ரூபாய்க்கு விற்பனையான 1 கிலோ பீன்ஸ், இன்று 80 -- 90 ரூபாய்க்கு விற்பனையானது.


Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
23-மே-202222:36:22 IST Report Abuse
Girija தமிழ்நாட்டில் பெட்ரோல் டீசல் விலை குறைந்ததா ? அதை சொல்லு முதல்ல. மதுரை தியாகராஜனின் மாநில பங்களிப்பு குறையாமல் கிடைக்குமா என்ற ஐயத்தை நீக்குபவருக்கு , நிதி அமைச்சர் மந்திரி பதவி, நிதி அமைச்சர் மந்திரி பதவி . ஐயோ நான் என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன் ? நிதி அமைச்சர் மந்திரி பதவியாச்சே , போச்சே போச்சே (தமிழக மந்திரி சபையில் மாறுதல்).
Rate this:
Cancel
gilbert - vienna,ஆஸ்திரியா
23-மே-202221:09:19 IST Report Abuse
gilbert அடுத்த ஸ்டிக்கர் ரெடி, நாளை வெளியிடப்படும்
Rate this:
23-மே-202221:18:51 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்DESEL PETROL இல் வண்டி ஓடுது AUTOMATIC இது குறைந்தால் TRANSPORT விலை குறியும்...
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
23-மே-202221:01:58 IST Report Abuse
Soumya புரூடா விடியல் தான் குறைக்க சொன்னதாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வா
Rate this:
23-மே-202221:22:07 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன்இப்போ கத்திரி வெயில் அனால் நாங்கள் அதை சமாளித்து விட்டோம் அதாவது திடீர் மழை , அடுத்து இன்னும் 5 நாள் மழை நாங்கள் கத்திரி வெயிலில் இருந்து தப்பித்தோம் / அடுத்து 60 வருடம் MAY மாதம் METUR DAM திறப்பு இன்னும் என்னடா வேணும் , இது தான் எங்கள் ராசி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X