பிரம்ம ஞான சபையின் 81 ஏக்கர் நிலம் ஆற்காடு இளவரசர் வாரிசுகள் கேட்பதால் சிக்கல்| Dinamalar

பிரம்ம ஞான சபையின் 81 ஏக்கர் நிலம் ஆற்காடு இளவரசர் வாரிசுகள் கேட்பதால் சிக்கல்

Added : மே 23, 2022 | |
சென்னை, அடையாறு பிரம்ம ஞானசபை வளாகத்தில், 81 ஏக்கர் நிலத்தை திருப்பி தருமாறு கேட்டு, ஐந்தாவது ஆற்காடு இளவரசரின் வாரிசுகள் பெயரில் கடிதம் வந்துள்ளதால், புதிய சர்ச்சை எழுந்து உள்ளது.உலக சகோதரத்துவத்தை நோக்கமாக கொண்டு, 'தியாசாபிகல் சொசைட்டி' எனப்படும், 'பிரம்ம ஞானசபை' 1875ல் அமெரிக்காவில் துவங்கப்பட்டது. சென்னை அடையாறில், 1882 முதல் இந்த அமைப்பு செயல்பட்டு

சென்னை, அடையாறு பிரம்ம ஞானசபை வளாகத்தில், 81 ஏக்கர் நிலத்தை திருப்பி தருமாறு கேட்டு, ஐந்தாவது ஆற்காடு இளவரசரின் வாரிசுகள் பெயரில் கடிதம் வந்துள்ளதால், புதிய சர்ச்சை எழுந்து உள்ளது.உலக சகோதரத்துவத்தை நோக்கமாக கொண்டு, 'தியாசாபிகல் சொசைட்டி' எனப்படும், 'பிரம்ம ஞானசபை' 1875ல் அமெரிக்காவில் துவங்கப்பட்டது. சென்னை அடையாறில், 1882 முதல் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.ஆரம்பத்தில், 27 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் துவங்கப்பட்ட இந்த அமைப்பின் வளாகம், தற்போது, 270 ஏக்கர் பரப்பளவுக்கு விரிவடைந்து உள்ளது.இதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், 'வளாகத்தின் கிழக்கு பக்கத்தில், 80 ஏக்கர் நிலம், ஆற்காடு இளவரசரிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது. 'இது தொடர்பான கிரைய பத்திரங்களை, அன்னி பெசன்ட் அம்மையார், 1908ல் பிரம்ம ஞானசபை நிர்வாகத்தில் ஒப்படைத்தார்' என்றும் கூறப்பட்டு உள்ளது.புதிய சர்ச்சைஇந்நிலையில், ஐந்தாவது ஆற்காடு இளவரசரின் வாரிசுகள் என்று குறிப்பிட்டு, ஒரு கடிதம் பிரம்ம ஞானசபைக்கு சமீபத்தில் வந்துள்ளது. அதில், 'ஆற்காடு நவாப்பின் ஐந்தாவது இளவரசராக, 1903 முதல் 1952 வரை, குலாம் முகமது அலிகான் பகதுார் இருந்தார். இவர், 1952ல் இறந்தார். ஆண் வாரிசு இல்லாததால், இவரது சகோதரரர் அடுத்த இளவரசரானார்.'இதையடுத்து, ஐந்தாவது இளவரசரின் மனைவி, மகள்கள், பாகிஸ்தானில் குடியேறினர். பிரம்ம ஞானசபைக்கு, 1906ல், ஐந்து சர்வே எண்களுக்கு உட்பட்ட, 81 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது குறித்து தெரிய வந்துள்ளது.'இந்த நிலத்தை திரும்ப பெற்று, முறையாக பயன்படுத்த விரும்புகிறோம். இது தொடர்பாக பேச்சு நடத்த, முகமது அலிகான் என்பவரை, எங்கள் பிரதிநிதியாக நியமித்து இருக்கிறோம். அவரை சந்திப்பதற்கும், பேச்சு நடத்தவும் ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.குழப்பம்சட்டப்பூர்வ கிரையமாக பெறப்பட்ட நிலத்தை திரும்ப கேட்டு, ஐந்தாவது ஆற்காடு இளவரசரின் வாரிசுகள் பெயரில் வந்துள்ள கடிதத்தால், பிரம்ம ஞானசபை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.- நமது நிருபர் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X