செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், சாலை விபத்தில் இறந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு, தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ் தலைமையில், கலெக்டர் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 167 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.பின், சலவை தொழிலாளர் 25 பேருக்கு, சலவை பெட்டி, சாலை விபத்தில் இறந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார்.தவிர, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஐந்து பேருக்கு தலா 22 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் நரிக்குறவர் 25 பேருக்கு நல வாரிய அடையாள அட்டை ஆகியவற்றை, மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.தனி சப் - கலெக்டர் ஜெயதீபன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் லலிதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.சிங்கப்பெருமாள் கோவில் -- ஒரகடம் சாலை ஓரம் கிடக்கும் குப்பை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE