36 லட்சம் கிலோ விதைகள் குறுவை சாகுபடிக்கு இருப்பு| Dinamalar

36 லட்சம் கிலோ விதைகள் குறுவை சாகுபடிக்கு இருப்பு

Added : மே 23, 2022 | |
சென்னை-குறுவை சாகுபடி ஆயத்தப் பணிக்காக, 36.75 லட்சம் கிலோ, குறுகிய கால ரக விதைகள், 5.62 லட்சம் கிலோ ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.குறுவை சாகுபடிக்கான, ஆயத்த நிலை தொடர்பாக, துறை அலுவலர்கள் உடனான சிறப்பு ஆய்வுக் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இருப்பு வேண்டும்வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தலைமை வகித்து பேசியதாவது:டெல்டா மாவட்டங்களில், நெல் நடவுப் பணி

சென்னை-குறுவை சாகுபடி ஆயத்தப் பணிக்காக, 36.75 லட்சம் கிலோ, குறுகிய கால ரக விதைகள், 5.62 லட்சம் கிலோ ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.குறுவை சாகுபடிக்கான, ஆயத்த நிலை தொடர்பாக, துறை அலுவலர்கள் உடனான சிறப்பு ஆய்வுக் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது.



இருப்பு வேண்டும்



வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தலைமை வகித்து பேசியதாவது:டெல்டா மாவட்டங்களில், நெல் நடவுப் பணி மேற்கொள்ள வசதியாக, நல் முளைப்புத் திறன் உள்ள நெல் விதைகளை, இருப்பு வைக்க வேண்டும். விதை ஆய்வுப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.கடைமடை வரை தண்ணீர் சென்று சேருவதை உறுதிப்படுத்த வேண்டும். தேவையான வேளாண் இயந்திரங்களை, விவசாயிகள் பயன்பாட்டிற்கு, தட்டுப்பாடின்றி வாடகைக்கு அளிக்க வேண்டும். வட்டார அலுவலர்கள், விவசாயிகளை சந்தித்து, மண்ணாய்வு அடிப்படையில், உரமிடுதலை ஊக்குவிக்க வேண்டும். உழவர் சந்தைகளை சுற்றியுள்ள கிராமங்களில்,



காய்கறி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி பேசியதாவது:நடப்பு குறுவை பருவத்திற்கு தேவையான, குறுகிய கால நெல் ரக விதைகளை, தேவையான அளவு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், தனியார் கடைகளிலும், இருப்பு வைத்திருக்க வேண்டும்.தற்போது, 36.75 கிலோ விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் முளைப்புத் திறனை, விதைச் சான்றளிப்பு துறை வழியே தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.



நடவடிக்கை



குறுவை பருவத்திற்கு தேவையான, யூரியா, டி.ஏ.பி., போன்ற உரங்கள் இருப்பு வைத்து, அவற்றின் விற்பனையை, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.குறுவை பருவத்தில், 66 ஆயிரம் ஏக்கர் மாற்றுப் பயிர் சாகுபடியை ஊக்குவிக்க, உரிய விவசாயிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான விதைகள் மற்றும் இதர வேளாண் இடுபொருட்களை வினியோகம் செய்ய வேண்டும்.அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, இதுவரை இல்லாத அளவு, கூடுதல் குறுவை சாகுபடி செய்ய, அனைதது நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X