வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை துவங்கி உள்ளதால், 19 நாட்களில், 11.4 டி.எம்.சி., நீர், தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
![]()
|
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா வழங்க வேண்டும். இதில், ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதம் நீர் வழங்கும் தவணைக் காலம் துவங்கி, அடுத்தாண்டு மே மாதம் முடியும். நடப்பு ஆண்டிற்கான, கடைசி மாதம் நடந்து வருகிறது. இம்மாதம், 2.50 டி.எம்.சி., நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும்.
அம்மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால், அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், இம்மாதம் 19ம் தேதி வரை, 11.46 டி.எம்.சி., நீர், பிலிகுண்டுலு நீரளவு தளத்தை கடந்து, தமிழக எல்லைக்கு வந்துஉள்ளது. இந்த காலக்கட்டத்தில், 1.53 டி.எம்.சி., மட்டுமே கிடைத்திருக்க வேண்டும். மழையால் அதிகளவில் நீரை திறந்து, கர்நாடகா தாராளம் காட்டியுள்ளது. இதனால், சேலம் - மேட்டூர் அணைக்கு வினாடிக்கு, 12 ஆயிரத்து, 777 கன அடி நீர்வரத்து கிடைத்துள்ளது.அணைகளுக்கு நீர்வரத்து தமிழகத்தில், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
![]()
|
தென்மேற்கு பருவ மழை காலங்களில், அணைகளுக்கு அதிகளவில் நீர்வரத்து கிடைக்கிறது. தற்போது, கன்னியாகுமரி மற்றும் கோவை மாவட்ட அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 707 கன அடி; பெருஞ்சாணி அணைக்கு நேற்று வினாடிக்கு 537 கன அடி நீர்வரத்து; கோவை - சோலையாறு அணைக்கு வினாடிக்கு 2,965 கன அடி; பரம்பிக்குளம் அணைக்கு 287 கன அடி; ஆழியாறு அணைக்கு 646 கன அடி நீர்வரத்து இருந்தது. திருநெல்வேலி, பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,107; கிருஷ்ணகிரி அணைக்கு வினாடிக்கு 1,459 கன அடி நீர்வரத்து உள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement