மரக்கன்றுகள் உற்பத்தி தொகை ரூ.39 லட்சம் நிலுவை; வேளாண் துறை அலட்சியத்தை சாடும் 'வனம்'

Updated : மே 23, 2022 | Added : மே 23, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
காஞ்சிபுரம் : வனத்துறை உற்பத்தி செய்து கொடுத்த மரக்கன்றுகள் மற்றும் செடிகளுக்கு, வேளாண் துறையினர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் 39 லட்சம் ரூபாய் விடுவிக்கவில்லை என, வனத்துறையினர் புலம்பி வருகின்றனர்.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், 5 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன.இந்த நிலங்களில், நெல், வேர்க்கடலை, கரும்பு

காஞ்சிபுரம் : வனத்துறை உற்பத்தி செய்து கொடுத்த மரக்கன்றுகள் மற்றும் செடிகளுக்கு, வேளாண் துறையினர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் 39 லட்சம் ரூபாய் விடுவிக்கவில்லை என, வனத்துறையினர் புலம்பி வருகின்றனர்.latest tamil newsகாஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், 5 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன.இந்த நிலங்களில், நெல், வேர்க்கடலை, கரும்பு மற்றும் காய்கறி பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இதில், கணிசமான வருவாய் மட்டுமே எடுக்க முடிகிறது.இதை தவிர்க்கும் விதமாக, 'நீடித்த பசுமை போர்வை இயக்கம்' திட்டத்தின் கீழ், விளை நிலங்களில் வருவாய் தரும் பலவித மரங்களை நட்டு வருவாயை பெருக்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துவக்கி வைத்தார்.மானிய விலை


தமிழகம் முழுதும், 11 கோடி ரூபாய் செலவில், 73 லட்சம் மரக்கன்றுகளை வனத்துறையினர் உற்பத்தி செய்து, வேளாண் துறைக்கு வழங்கினர்.அதன்படி, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், 5.17 லட்சம் எண்ணிக்கையில் பலவித மரக்கன்றுகள் மற்றும் செடிகளை வனத்துறையினர் உற்பத்தி செய்து, வேளாண் துறையினருக்கு கொடுத்துள்ளனர்.நாற்றங்கால், பண்ணை அமைப்பதற்குரிய நிலம் மற்றும் நீர் பாசன வசதி, உரம், செடி பராமரிப்பு உள்ளிட்ட பல செலவுகளுடன், ஒரு செடி உற்பத்தி செய்வதற்கு, 15 ரூபாய் வரையில் வனத்துறையினர் செலவு செய்துள்ளனர்.இந்த செடிகள் உற்பத்திக்குரிய கட்டணத்தை, வேளாண் துறையினர் செலுத்திய பின்னரே, வனத்துறையினர் உற்பத்தி செய்த செடிகளை எடுத்து, விவசாயிகளுக்கு மானிய விலையில் கொடுக்க வேண்டும்.வேளாண் துறையினரோ, விவசாயிகளுக்கு செடிகள் வழங்கும் திட்டத்தை உடனடியாக முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பாதி பணத்தை மட்டும் செலுத்தி, விவசாயிகளுக்கு அவசர அவசரமாக செடிகளை எடுத்து கொடுத்து விட்டனர். ஆனால், மீதி பணத்தை செலுத்தாமல் விட்டதால் வனத்துறையினர் தற்போது புலம்பி வருகின்றனர்.


latest tamil news

தொந்தரவு


இதனால், நாற்றங்கால் பண்ணை அமைத்தவருக்கு, பணம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என வனத்துறையினர் புலம்பி வருகின்றனர்.நாற்றங்கால் அமைக்க நிலம் கொடுத்தவர்கள், குத்தகை பணம் கேட்டு வனத்துறையினருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகம் முழுதும், வனத்துறையினர் உற்பத்தி செய்து கொடுத்த செடிகளுக்குரிய, பாதி தொகை வந்தது; மீதம் வரவில்லை.அந்த தொகை வந்தால், நிலத்திற்குரிய வாடகை உள்ளிட்ட செலவினங்களுக்கு பணம் வழங்க முடியும். வேளாண் துறை உயரதிகாரிகளிடம் கேட்ட போது, விரைவில் வந்துவிடும் என கூறுகின்றனர்.ஐந்து மாதங்களாகியும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. பணம் கேட்டு நிலம் குத்தகைக்கு கொடுத்தவர்கள் தொந்தரவு செய்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

பாக்கி தொகை எவ்வளவு?

மாவட்டங்கள் உற்பத்தி செய்யப்பட்ட செடிகள் பாக்கி தொகைகாஞ்சிபுரம் 3.65 லட்சம் 27,37,500செங்கல்பட்டு 53,000 3,97,500திருவள்ளூர் 99,800 7,48,500மொத்தம் 5,17,800 38,83,500Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagar - Dukhan ,கத்தார்
24-மே-202205:44:11 IST Report Abuse
Nagar தி மு க ஆட்சி போய் பிஜேபி ஆட்சி வந்தால் தான் தமிழகத்தில் ஊழலும், நிர்வாக மெத்தன்மையும் ஒழியும்.
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
23-மே-202221:53:15 IST Report Abuse
Sai ஆடிட்டர் பில்லை அவ்வளவு சீக்கிரம் விடுவிப்பாரா? ஆளுநரைப்போல ஆயிரம் கேள்விகேட்டு திருப்பியனுப்புவதுதான் வாடிக்கை INTER DEPARTMENTAL DUES ALWAYS RUNS INTO CRORES உதாரணத்துக்கு ஒன்று - நிலக்கரி கொண்டு வந்ததற்கு ரயில் கட்டணத்தை கேட்டால் மின்துறை ரயில்வே மின் கட்டணம் பாக்கி அதைவிட அதிகமிருக்கேன்னு கொளுத்திப் போடும் (சும்மாதான் ஒரு செக்)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X