அக்னி நட்சத்திர வெயில் உச்சம்: சென்னையில் உக்கிரம்

Updated : மே 23, 2022 | Added : மே 23, 2022 | |
Advertisement
சென்னை: அக்னி நட்சத்திரத்தின் உச்ச கட்டமாக, சென்னையில் இன்று (மே 23), 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில், இன்று அக்னி நட்சத்திர வெயில் உக்கிரம் காட்டியது. அதிகபட்சமாக சென்னையில், 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் தகித்தது. அதாவது, 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் ஆகிய இரண்டு இடங்களிலும், இந்த வெப்ப
Agni Natchathiram, hot, Chennai

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: அக்னி நட்சத்திரத்தின் உச்ச கட்டமாக, சென்னையில் இன்று (மே 23), 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.

மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில், இன்று அக்னி நட்சத்திர வெயில் உக்கிரம் காட்டியது. அதிகபட்சமாக சென்னையில், 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் தகித்தது. அதாவது, 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் ஆகிய இரண்டு இடங்களிலும், இந்த வெப்ப நிலை பதிவானது.

திருத்தணி, வேலுார், கடலுார், கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், பரங்கிப்பேட்டை, 39; திருச்சி, புதுச்சேரி, 38 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. இந்த இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி, வெயில் வாட்டி எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக கொடைக்கானலில், 19; குன்னுாரில், 23 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.


latest tamil news



அக்னி நட்சத்திர காலம் வரும், 28ம் தேதி முடிய உள்ள நிலையில், இறுதி கட்டமாக, மாநிலம் முழுதும், கோடை வெயில் மீண்டும் தீவிரம் காட்டியுள்ளது. நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், வெப்ப சலனத்தால் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில், 100 டிகிரி பாரன்ஹீட்டான, 38 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெயில் பதிவாகும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென் மேற்கு, மத்திய கிழக்கு வங்க கடல், அந்தமான் பகுதிகளில் சூறாவளி காற்று வீசுவதால், அங்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, கோவை சின்கோனா, வால்பாறை, 3; சோலையார், அவலாஞ்சி, மேல் கூடலுார், 2; அரிமளம், நீலகிரி பார்வூட், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X