புதிதாக உருவான கடற்கரையால் மீனவர்கள் மகிழ்ச்சி! கல்பாக்கம் பகுதி கடலரிப்பு தடுப்பால் பயன்;

Updated : மே 23, 2022 | Added : மே 23, 2022 | |
Advertisement
மாமல்லபுரம் : கல்பாக்கம் மீனவ பகுதிகளில் கடலரிப்பு தடுக்க, 19 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட நேர்கல் தடுப்பால், புதிய கடற்கரை ஏற்பட்டுள்ளது. இதேபோல் பிற மீனவ பகுதிகளிலும் தடுப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், 75 கி.மீ., நீள கடற்கரை உள்ளது.கானத்துார் ரெட்டிகுப்பம் முதல், இடைக்கழிநாடு


மாமல்லபுரம் : கல்பாக்கம் மீனவ பகுதிகளில் கடலரிப்பு தடுக்க, 19 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட நேர்கல் தடுப்பால், புதிய கடற்கரை ஏற்பட்டுள்ளது. இதேபோல் பிற மீனவ பகுதிகளிலும் தடுப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், 75 கி.மீ., நீள கடற்கரை உள்ளது.



latest tamil news


கானத்துார் ரெட்டிகுப்பம் முதல், இடைக்கழிநாடு ஆலம்பரைகுப்பம் வரை, 36 பகுதிகளில், மீனவர்கள் வசிக்கின்றனர்.வாழ்வாதார தொழிலாக, 7,500க்கும் மேற்பட்டோர், கடலில் மீன் பிடிக்கின்றனர். மீன்பிடிக்க விசைப்படகு, ஆழ்கடல் படகுகள் என பயன்படுத்துகின்றனர். மீன்பிடி படகுகள், வலைகளை, கடற்கரை பகுதியில் பாதுகாப்பாக வைக்கின்றனர். கடற்கரை பகுதியில், வலைபின்னல், ஏல கூடங்கள் ஆகியவை உள்ளன.

அமாவாசை, பவுர்ணமி நாட்கள், புயல், காற்றழுத்த குறைவு, நீரோட்ட மாற்றம் நிகழ்வுகளின்போது, கடலில் சீற்றம் அதிகரித்து, அலைகள் ஆர்ப்பரிக்கும்.அப்போது, கடல் நீர் நிலப்பகுதியில் புகுவதால், படகுகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.இது ஒருபுறமிருக்க, 18 ஆண்டுகள் முன், கடலில் உருவான சுனாமி அலையால், கடலின் இயல்பு தன்மை மாற்றமடைந்து உள்ளது.இதன் காரணமாக கடலரிப்பு ஏற்படுவதாக கருதப்படும் நிலையில், கடலரிப்பு நீடிக்கிறது.


latest tamil news


கடலரிப்பால் பல ஆண்டுகளாக, மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.கடலரிப்பால், மீனவ வீடுகள் இடிந்து, கடலில் விழுகின்றன. ஆழ்கடல் படகுகளை நிறுத்துவதற்கு இடம் இல்லாததால், சென்னை, கடலுார் துறைமுகங்களுக்கு எடுத்து செல்கின்றனர். இதனால் மீனவர்களுக்கு நேரம், எரி பொருள் விரயம் ஏற்படுகிறது.

இத்தகைய சூழலில், செங்கல்பட்டு மாவட்டம் அணுசக்தி துறை, கல்பாக்கம் நகரியம் அடுத்த புதுப்பட்டினம் குப்பம், வாயலுார் உய்யாலிகுப்பம் மீனவ பகுதிகளில், 25 ஆண்டுகளாக கடல் சீற்றம், புயல் பாதிப்புகளால் கடல் அரித்து, கடற்கரை பகுதி அழிந்து வருகிறது.சில தெருக்கள் கடலில் மூழ்கி மாயமாகி உள்ளன. கடற்கரை மணற்பரப்பு இன்றி, படகுகள், வலைகள் பாதுகாக்க இயலாத நிலை ஏற்பட்டது.

தற்போதைய வசிப்பட பகுதியையும், கடல் சூழும் அபாயம் ஏற்பட்டது.இதனால் கடலரிப்பு அபாயம் தவிர்க்க, தடுப்பு நடவடிக்கைக்கு, அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தினர்.அரசு பரிசீலித்து, 2020ல், 110 விதியின்கீழ், கடலரிப்பை தடுக்கும் நேர்கல் தடுப்பு திட்டத்தை அறிவித்தது.தமிழக மீன்வளத் துறை, 'நபார்டு' வங்கி நிதியுதவியில், இரண்டு மீனவ பகுதிகள் ஒருங்கிணைந்த கடற்கரை பகுதியில், நேர்கல் தடுப்பு, மீன்பிடி தொழில் மேம்பாட்டிற்காக, மீன் இறங்குதளம் அமைக்க உத்தரவிட்டது.

கடந்த 2021 பிப்ரவரியில் அடிக்கல் நாட்டி, பணிகள் துவக்கப்பட்டன. இத்தடுப்பு திட்டம், தற்போது முழுமை பெற்றுள்ளது.இத்திட்டத்தால், வசிப்பிட பகுதியை நெருங்கியிருந்த கடல், தற்போது 100 மீ., உள்வாங்கி உள்ளதால், மீனவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.இதேபோல் புதுப்பட்டினம்குப்பம் - உய்யாலிகுப்பம் பகுதி தடுப்பால், 750 மீ., நீளத்திற்கு கடற்கரை உருவாகும் நிலை இருக்கிறது.கோவளம், சூலேரிக்காடு பகுதிகளிலும், இத்தடுப்புகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.படகுகள் நிறுத்த முடிகிறது

புதுப்பட்டினம் குப்பம், உய்யாலிகுப்பம் ஆகிய பகுதிகளை ஒருங்கிணைத்து 19 கோடி ரூபாய் மதிப்பில், நேர்கல் தடுப்பு, கூடங்களுடன் மீன் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் கடற்கரை உருவாகி, படகுகள் நிறுத்த முடிகிறது. கடலரிப்பு உள்ள பிற இடங்களிலும், தடுப்பு அமைக்க முடிவெடுத்துள்ளோம்.பெயர் வெளியிடாத மீன்வளத் துறை அலுவலர், சென்னைஇழப்பு தவிர்க்கப்பட்டது.

கடலரிப்பால், பல ஆண்டுகளாக, வீடுகள் இழந்து பாதிக்கப்பட்டோம். படகுகளை நிறுத்த, வலைகள் வைக்க இடமில்லை. மீன்வளத் துறை அமைத்த தடுப்பால், புதிதாக கடற்கரை உருவாகிஉள்ளது. இது, எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மீனவர்கள், புதுப்பட்டினம்.

ஆறு தடுப்புகள்

நேர்கல் தடுப்புகடற்கரையில், 450 மீ., நீளத்தில் வடக்கு - தெற்கில், ஏழு வரிசைகளில், நேர்கல் தடுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கரை பகுதியிலிருந்து கடலை நோக்கி, குறிப்பிட்ட உயரத்திற்கு, பாறை கற்கள் குவிக்கப்பட்டு தடுப்பு அமைந்துள்ளது. மைய பகுதி தடுப்பு, 90 மீ., நீளம், அதன் இருபுறம் 40 மீ., - 70 மீ., நீள தனித்தனியாக ஆறு தடுப்புகள் உள்ளன.மீன் இறங்குதளம்இரண்டு பகுதிகளிலும், தலா ஒரு மீன் ஏல கூடம், வலைபின்னல் கூடம், உலர்தளம், பொது சுகாதார வளாகம் என அமைக்கப்பட்டுள்ளது.



எப்படி சாத்தியமானது?

கடல் அலைகள், பருவகால மாற்றத்திற்கேற்ப, வடகிழக்கு திசை அல்லது தென்மேற்கு திசை பகுதியிலிருந்தே, கடற்கரையை நோக்கி அலை வரும்.நேர்கல் தடுப்பு, அலை திசைக்கு மாறாக, நேர் திசையில் அமைவதால், அலைகள் தடுப்பில் மோதி, அதன் வேகம் குறைக்கப்படும்.இதனால் கரைப் பகுதிக்கு அடித்து வரப்படும் கடல் மணல், மீண்டும் கடலுக்கு செல்ல இயலாமல், தடுப்புகளை ஒட்டி தொடர்ந்து குவிந்து, மணற்பரப்பு உருவாகி, கடற்கரையாக மாறும்.




Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X