மத கலவரத்தை தூண்ட சதி: அமைச்சர் மீது பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Updated : மே 23, 2022 | Added : மே 23, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீசை துாண்டி விட்டு, மத கலவரம் ஏற்படுத்த முயற்சிப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் மீது, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.நாகர்கோவிலில் அவர் கூறியதாவது: குமரி மாவட்டத்தில், 40 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மத கலவரத்தின் பாதிப்பு இன்னும் அகலவில்லை. அண்மையில் நடந்து வரும் பிரச்னைகள், மீண்டும் ஒரு மத
Pon Radhakrishnan, BJP

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீசை துாண்டி விட்டு, மத கலவரம் ஏற்படுத்த முயற்சிப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் மீது, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

நாகர்கோவிலில் அவர் கூறியதாவது: குமரி மாவட்டத்தில், 40 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மத கலவரத்தின் பாதிப்பு இன்னும் அகலவில்லை. அண்மையில் நடந்து வரும் பிரச்னைகள், மீண்டும் ஒரு மத கலவரத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. பைக்கில் சென்ற இருவர் மீது மழை நீர் தெளித்த பிரச்னை, அமைச்சர் மனோ தங்கராஜ் தலையீட்டால் மத மோதலாக மாறி வருகிறது.


latest tamil news



சமரசம் செய்து அனுப்பிய ரதீஷின் அண்ணன், ராதாகிருஷ்ணன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளார். ஹிந்துக்கள் மீது மட்டும் போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர். முதல்வர் இதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
24-மே-202202:25:59 IST Report Abuse
BASKAR TETCHANA முதல்வருக்கு இதில் எல்லாம் கவனம் செலுத்த நேரமில்லை. மனையுடன் ஊட்டி கொடைக்கானல் சேலம் போன்ற இடங்களில் திறப்பு விழாக்கள் விளம்பர நிகழ்வுகள் எல்லாம் இருக்கிறது அதை விடுத்து இது தான் முக்கியமா.
Rate this:
Cancel
23-மே-202223:33:21 IST Report Abuse
Gopalakrishnan S வாஸ்தவம்தான். நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டங்களில் போலீஸ் ஹிந்துக்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்கிறது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
23-மே-202222:29:01 IST Report Abuse
Ramesh Sargam அமைச்சர் மனோ தங்கராஜ் மீது, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய குற்றம் நிரூபணமானால், அந்த மனோ மீது மதக்கலவரத்தை தூண்டிய குற்றத்துக்காக வழக்கு பதிவுசெய்யப்பட்டு அவர் தண்டனை அனுபவிக்கவேண்டும்.
Rate this:
24-மே-202208:23:31 IST Report Abuse
ஆரூர் ரங்குற்றம் கோர்ட்டில் தானே நிரூபணமாகும்? அமைச்சரைக் 🙄கைது செய்தால்தான் உண்மை வெளிவரும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X