தரிசை விளைச்சல் நிலமாக்கும் திட்டம் துவக்கம்; 359 ஊராட்சிகளில் 391.68 ஏக்கர் நிலம் மேம்படும்

Updated : மே 23, 2022 | Added : மே 23, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
மாமல்லபுரம் : தரிசு நிலங்கள், சாகுபடிக்கு ஏற்ப மாற்றுவதற்காக, ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், செங்கல்பட்டில் நேற்று துவக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.தமிழக நில பரப்பு விவசாயத்திற்கு ஏற்றது. பொருளாதார சூழல் காரணமாக, பாசன நீராதார நீர்நிலைகளில் நீர்வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால், படிப்படியாக

மாமல்லபுரம் : தரிசு நிலங்கள், சாகுபடிக்கு ஏற்ப மாற்றுவதற்காக, ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், செங்கல்பட்டில் நேற்று துவக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.தமிழக நில பரப்பு விவசாயத்திற்கு ஏற்றது. பொருளாதார சூழல் காரணமாக, பாசன நீராதார நீர்நிலைகளில் நீர்வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால், படிப்படியாக விவசாயம் பாதிக்கப்பட்டது.latest tamil news


விவசாயம் செய்வது குறைந்து வருகிறது.இந்நிலையில், மாநிலம் முழுவதும், தரிசு நிலத்தை சாகுபடிக்கேற்ப மேம்படுத்தி, விவசாயத்தில் தன்னிறைவு அடைய, தமிழக அரசு முடிவெடுத்தது.கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில், முதல் முறையாக, விவசாயத்திற்கென தனி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அதில், அனைத்து கிராமங்களிலும், விவசாய மேம்பாடு கருதி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது.கடந்த 2021 - 22ல், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,997 கிராமங்களில், முதலில் இத்திட்டத்தை செயல்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.

மாநிலத்தின் தற்போதைய 60 சதவீத விவசாய சாகுபடியை, 75 சதவீதமாக அதிகப்படுத்துவதே, இத்திட்ட நோக்கம்.இதற்காக, வேளாண் மற்றும் உழவர் நலம், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வணிகம், நீர்வள ஆதாரம், ஊரக வளர்ச்சி, வருவாய், மின் வாரிய ஆகிய துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.இத்திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று, தலைமை செயலகத்தில், காணொலி காட்சி மூலம் துவக்கினார்.


latest tamil news


செங்கல்பட்டு மாவட்டம், மணமை பகுதியில், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் துவக்கி, பயனாளிகளுக்கு, நலத்திட்ட சேவைகள் அளித்தார்.அப்போது, அவர் பேசியதாவது:செங்கல்பட்டு மாவட்டத்தில், 2021 - 22ல், 55 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.ஐந்து ஆண்டுகளில், 359 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும். 391.68 ஏக்கர் தரிசு நிலம், சாகுபடிக்கு மேம்படுத்தப்படும்.தவிர 11 ஆயிரம் பண்ணை குடும்பங்கள் அமைக்கப்படும். 33 ஆயிரம் பேருக்கு தலா மூன்று தென்னங்கன்றுகள்; 550 பேருக்கு, தெளிப்பான் கருவிகள் வழங்கப்படும்.வீட்டு மாடி தோட்டம் அமைக்க, 6,900 பேருக்கு, மானிய விலையில் பொருட்கள், 825 ஏக்கரில் பயிர் வகைகள் பயிரிட, 4 லட்சம் கிலோ விதைகள் வழங்கப்படும். இவற்றின் மதிப்பு, 57.91 லட்சம் ரூபாய்.இவ்வாறு, அமைச்சர் அன்பரசன் பேசினார்.

காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியில் 200 பண்ணை குடும்பங்களுக்கு, 600 தென்னங்கன்றுகள், 10 தெளிப்பான்கள், 10 மீன்பிடி படகு மானிய விலை இன்ஜின் உள்ளிட்டவை என, 55 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டதுதவிர, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 50.98 லட்சம் ரூபாய் கடனுதவி, 10 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி ஆணை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

திட்டத்தில் செய்யப்படும் சேவைகள்

பாசன நீராதாரமற்ற, தரிசு நிலத்தை சாகுபடிக்கு மேம்படுத்தல், ஆழ்துளை கிணறு, கிணறு அமைத்தல், நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரிய சக்தி இயக்க பம்ப் அமைத்தல், விவசாய பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தல்.கால்நடைகள் நலன் பாதுகாப்பு மற்றும் பால் உற்பத்தி பெருக்கம், கூட்டுறவு சங்க பயிர்க் கடன்களை அதிகப்படுத்தல், விவசாய மின் இணைப்பு வழங்கல், பட்டா வழங்கல் மற்றும் பட்டா பெயர் மாற்றத்தை எளிதாக்கல், ஏரி, குளங்கள் துார் வாருதல் உள்ளிட்டவை செய்யப்பட உள்ளன.திட்டம் மேற்கொள்ளப்படும் இடங்கள்

வட்டாரம் கிராமங்கள்அச்சிறுப்பாக்கம் 10மதுராந்தகம் ஒன்பதுதிருக்கழுக்குன்றம் எட்டுதிருப்போரூர் ஏழுபவுஞ்சூர் ஆறுகாட்டாங்கொளத்துார் ஆறுசித்தாமூர் ஐந்துசிட்லபாக்கம் நான்கு* திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்கள் - 55பல இடங்களில் நிகழ்ச்சி

செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சியில் நடந்த இந்நிகழ்ச்சியில் வனக்குழு தலைவர் திருமலை, ஊராட்சி தலைவர் பரிமளா ஆகியோர் பங்கேற்றனர்.திருப்போரூர் வட்டாரத்தில் தையூர், கோவளம், முட்டுகாடு, பெருந்தண்டலம் உள்ளிட்ட கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, திட்டம் துவங்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் பட்டிபுலம் கிராமத்தில், தரிசு தொகுப்பிற்குட்பட்ட விவசாய சங்க உறுப்பினர்களுக்கு இலவசமாக இரண்டு ஆழ்துளை கிணறு அமைக்க பணி ஆணையும், மற்ற கிராமங்களில் மானியத்தில் இடுபொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.கூடுவாஞ்சேரி, மதுராந்தகம், செய்யூர் உட்பட பல இடங்களில், இந்நிகழ்ச்சி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.Loganathan - Virudhunagar,இந்தியா
25-மே-202211:28:18 IST Report Abuse
P.Loganathan புறம்போக்கு நிலங்கள் விவசாயம் மட்டுமே செய்ய 100 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் தரலாம்
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
24-மே-202202:27:40 IST Report Abuse
BASKAR TETCHANA இவ்வளவு நிலங்களையும் சபரீசன் வாங்கி போட்டதாக செய்திகள் வெளி வந்ததே
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
23-மே-202222:48:02 IST Report Abuse
Fastrack தனியாரும் விவசாயிகளும் அரசு நிலங்களில் ஒருங்கிணைந்து விவசாயம் செய்யலாம் …அரசு மட்டுமே செய்தால் உருப்படாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X