நயன்தாரா - விக்னேஷ் சிவன் குலதெய்வ கோவிலில் வழிபாடு

Added : மே 23, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
தஞ்சாவூர்-தஞ்சாவூர் அருகே குலதெய்வ கோவிலில், இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்.தஞ்சாவூர் மாவட்டம், மேல வழுத்துார் கிராமத்தில், ஆற்றங்கரை காஞ்சி காமாட்சியம்மன் கோவில், இயக்குனர் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவில்.விரைவில் நடிகை நயன்தாராவை திருமணம் செய்ய உள்ள விக்னேஷ் சிவன், அவருடன் நேற்று மதியம் இந்த கோவிலுக்கு வந்தார்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் குலதெய்வ கோவிலில் வழிபாடு

தஞ்சாவூர்-தஞ்சாவூர் அருகே குலதெய்வ கோவிலில், இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்.

தஞ்சாவூர் மாவட்டம், மேல வழுத்துார் கிராமத்தில், ஆற்றங்கரை காஞ்சி காமாட்சியம்மன் கோவில், இயக்குனர் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவில்.விரைவில் நடிகை நயன்தாராவை திருமணம் செய்ய உள்ள விக்னேஷ் சிவன், அவருடன் நேற்று மதியம் இந்த கோவிலுக்கு வந்தார். நயன்தாரா கோவில் பிரகாரத்தில் பொங்கல் வைத்தார்.தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.

கருவறையில் இருந்த காமாட்சியம்மன், குப்பாயி, மகமாயி உள்ளிட்ட தெய்வங்களை இருவரும் வழிபட்டனர். நயன்தாரா கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்து, கிராம மக்கள், இளைஞர்கள் கூட்டம் அதிகம் வந்திருந்தது. இரண்டு மணி நேரம், கோவிலில் இருந்த கிராம மக்களுடன் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

ரசிகர்கள், நடிகை நயன்தாராவுடன் போட்டோ எடுத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டினர். நடிகை நயன்தாராவை, விக்னேஷ் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதில் கவனம் செலுத்தினார். அங்கிருந்து, கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு அவர்கள் சென்றனர். கோவிலில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவில் யானைக்கு வாழைப்பழம் வழங்கி, ஆசிர்வாதம் பெற்றனர். அரைமணி நேரத்திற்கு பின், இருவரும் புறப்பட்டுச் சென்றனர்.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Desi - Chennai,இந்தியா
24-மே-202211:51:38 IST Report Abuse
Desi தியாகி விக்னேஷ் சிவன்
Rate this:
Cancel
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
24-மே-202209:56:33 IST Report Abuse
பெரிய ராசு கோவிலுக்கு பாதுகாப்பு போட்டு இந்த கேடுகெட்டநடிகர்கள்இடம் இருந்து சுவாமியை காப்பாற்றவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X