மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் தானம்

Updated : மே 24, 2022 | Added : மே 23, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை : சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த, இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு சி.டி.எச்., சாலை பகுதியைச் சேர்ந்தவர் துளசிராம். இவரது மனைவி கீதா. இவர்களின் இளைய மகன் சரண், 18.கடந்த 21ம் தேதி, நண்பரின் பிறந்த நாளை கொண்டாடி, அன்று மாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது, போலிவாக்கம் அருகே வேன் மோதி, சரண் கீழே விழுந்தார். இதில்,
மூளைச்சாவு  அடைந்த  இளைஞரின் உறுப்புகள் தானம்

சென்னை : சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த, இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு சி.டி.எச்., சாலை பகுதியைச் சேர்ந்தவர் துளசிராம். இவரது மனைவி கீதா. இவர்களின் இளைய மகன் சரண், 18.கடந்த 21ம் தேதி, நண்பரின் பிறந்த நாளை கொண்டாடி, அன்று மாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது, போலிவாக்கம் அருகே வேன் மோதி, சரண் கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தோர் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து, அன்று இரவே மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், நேற்று பிற்பகலில் சரண் மூளைச்சாவு அடைந்ததாக பெற்றோரிடம் கூறினர்.

இதையடுத்து, மகனின் உடல் உறுப்புகளை தானமளிக்க, சரணின் பெற்றோர் முன்வந்தனர். பின், இரண்டு கண்கள், இதயம், கல்லீரல், இதய வால்வுகள், இரு சிறுநீரகங்கள், தோல் ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இந்த உடல் உறுப்புகள், தகுதியான உள்நாட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளன.பிரேத பரிசோதனைக்குப் பின், சரணின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M senthilkumar - Devakottai,இந்தியா
26-மே-202210:14:45 IST Report Abuse
M senthilkumar வாகனங்கள் எப்படி இயங்க வேண்டும் என்பதை தயாரிப்பு நிலைகளில் ஒழுங்கு படுத்த சட்டங்கள் உலக அளவில் ஏற்படுத்தப்பட வேண்டும் அதிகமான வேகங்கள் இல்லாமல் மிதமான சீரான வேகத்தில் இயங்கும் மோட்டார் அமைக்கப்பட வேண்டும் இதற்கு உலகளவில் சட்டங்கள் இயற்றி மிக கவனமாக கண்காணிக்க வேண்டும் அப்பொழுது தான் விபத்துக்களை தவிர்க்க முடியும் வாகனங்களை ஐம்பது கி மி ல் இயங்கும் வகையில் மோட்டார் சைக்கிள் முதல் கனரக வாகனங்கள் வரை மோட்டார் களை தயாரிப்பு நிறுவனங்கள் வடிவமைத்து தயாரிக்க வேண்டும் அப்பொழுது தான் விபத்துக்களை தவிர்க்க முடியும் அரசாங்கங்களும் தயாரிப்பு நிறுவனங்களும் மனது வைத்தால் பல குடும்பங்கள் வாழும்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
24-மே-202220:37:07 IST Report Abuse
Vena Suna ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரின் உறுப்புகளை எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. மூளை சாவு என்றாலும் உயிர் இருக்கிறது.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
24-மே-202213:10:06 IST Report Abuse
அசோக்ராஜ் அப்பட்டமான மோசடி. பெற்றோர் ஏமாந்தனரா? காசுக்கு விலை போனார்களா? பெரும் பணக்காரர்களுக்கு தேவை என்பதால் நெறியற்ற அரசாங்கம் இத்தகைய மோசடியை சட்டபூர்வமாக ஆக்கி இருக்கிறது. மாறுதல் தேவை. இருபத்தைந்து வயது நிரம்பியவர் மட்டுமே உறுப்பு தானப் பத்திரம் எழுதி சப் ரிஜிஸ்தர் ஆஃபீஸில் ரிஜிஸ்டர் செய்ய சட்டம் வர வேண்டும். அப்படி ரிஜிஸ்டர் செய்யாதவர் மூளைச்சாவு அடைந்தால் உறுப்பு தானம் செய்ய எந்த உறவினருக்கும் அனுமதி தடை செய்யப்பட வேண்டும். தானம் பெற்றவர், கொடுத்தவர் இரு பக்கத்தினரின் முழு விவரமும் பிரத்யேக இணைய தளத்தில் நிரந்தரமாக வெளியிடப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி மற்றும் டாக்டர் விவரங்களும் வெப்ஸைட்டில் சேர்க்கப்பட வேண்டும். ரெகுலேட் செய்யாத வரை மோசடிகளைத் தடுக்க வழியில்லை.
Rate this:
24-மே-202219:05:59 IST Report Abuse
ஆரூர் ரங்TRANSTAN எனும் தமிழக அரசின் வலைதளத்தில் போய்ப் பாருங்கள் எவ்வளவு தூரம் உறுப்பு தான விபரங்களை நேர்மையாகப் பதிவு செய்கிறார்கள் என்பதைக் காணலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X