காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, செவிலிமேட்டில், வாகன ஓட்டிகளை திசை திருப்பும் வகையில், விதியை மீறி சாலையோரம் வைக்கப்பட்டுள்ள, சினிமா 'டிஜிட்டல் பேனரால்' வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நகர்புற மற்றும் ஊராட்சி பகுதிகளில் பிரதான சாலை, சாலை சந்திப்புகள், பொது இடங்கள், அரசுக்கு சொந்தமான இடங்கள், தனியாருக்கு சொந்தமான கட்டடங்கள் மற்றும் இடங்கள் மீதும் விளம்பர பலகை, டிஜிட்டல் பேனர் அமைப்பதற்கு முன் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும்.அனுமதியின்றி பேனர் வைப்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் விதிமீறல் பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது.இந்நிலையில் எம்.எல்.ஏ., உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி சினிமா கடந்த 20ல் வெளியாகிஉள்ளது. இந்த சினிமா பட விளம்பரத்திற்காக, காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, செவிலிமேடு அருகில், வாகனபோக்குவரத்து அதிகம் நிறைந்த சாலையோரம் உள்ள ஒரு வீட்டின் சுவரில் 'டிஜிட்டல் பேனர்' அமைக்கப்பட்டு உள்ளது.
வாகன ஓட்டிகளை திசை திருப்பும் வகையில், வைக்கப்பட்டுள்ள 'டிஜிட்டல் பேனரால்' அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, விதிமீறல் சினிமா பேனரை பாரபட்சமின்றி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE