தடுமாறி நிற்குது ஊர்க்காவல் படை: ஊதியம் தர யார் போட்டாரோ தடை?

Updated : மே 27, 2022 | Added : மே 23, 2022 | |
Advertisement
லேடி ஆபீசரின் 'மாமூல்' வேட்டை; 'சரக்கு' கடைக்காரர்களிடம் சேட்டைஅக்னி நட்சத்திர வெயிலை மாயமாக்கி, சாரல் மழை பெய்து கொண்டிருந்த ஒரு மாலை நேரம். சித்ராவும், மித்ராவும் அருகிலுள்ள பூங்கா 'ஷெட்'டுக்குள் சென்று அமர்ந்தனர்.''மித்து, 'டாஸ்மாக்' சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவிச்சதால, லேடி கலால் ஆபீசர் 'லாங் லீவ்'ல போயிட்டாராம்,'' ஆரம்பித்தாள் சித்ரா.''என்ன
தடுமாறி நிற்குது ஊர்க்காவல் படை: ஊதியம் தர யார் போட்டாரோ தடை?

லேடி ஆபீசரின் 'மாமூல்' வேட்டை; 'சரக்கு' கடைக்காரர்களிடம் சேட்டை

அக்னி நட்சத்திர வெயிலை மாயமாக்கி, சாரல் மழை பெய்து கொண்டிருந்த ஒரு மாலை நேரம். சித்ராவும், மித்ராவும் அருகிலுள்ள பூங்கா 'ஷெட்'டுக்குள் சென்று அமர்ந்தனர்.

''மித்து, 'டாஸ்மாக்' சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவிச்சதால, லேடி கலால் ஆபீசர் 'லாங் லீவ்'ல போயிட்டாராம்,'' ஆரம்பித்தாள் சித்ரா.''என்ன விஷயமாங்க்கா...''''அவருக்கு, ஒவ்வொரு 'டாஸ்மாக்' கடையில் இருந் தும், மாசமாசம், ஆயிரம் ரூபாய் 'கப்பம்' கட்டிடுவாங்களாம். அதுமட்டுமல்லாது, 'சரக்கு' பாட்டில் அதிக விலைக்கு விற்கறீங்க. இன்ஸ்பெக் ஷன் பண்ணினா, அஞ்சாயிரம் வரைக்கும் 'பைன்' போடுவேன்'னு மிரட்டி, அதிகமா பணம் கேட்டு வசூல் செய்ய ஆரம்பிச்சுட்டாராம்,''''பொறுமையிழந்த ஆளுங்கட்சி 'டாஸ்மாக்' சங்கத்து நிர்வாகிகள், அவர்கிட்ட போய், 'நீங்க இப்படியெல்லாம் கொள்ளையடிக்க கூடாது. 150 கடைக்கான பணத்தை கொடுத்தும் பத்தலையா. விஜிலென்ஸில் சொல்லிடுவோம்னு மிரட்டினாங்களாம்...' அதனால மிரண்டு போய் மன 'சாந்தி'யில்லாமல், அந்த அதிகாரி 'லாங் லீவ்'ல போயிட்டாங்களாம்,''''அவங்களுக்கு கலெக்டர் ஆபீசுல இருக்கற 'நேர்முகமான' ஆபீசர் ஒருத்தரோட 'சப்போர்ட்' இருக்கறதால, யாரும் எதுவும் செய்ய முடியாதுனு, இந்தம்மா இப்படி பண்றாங்கன்னு, ஆபீசர்களே பேசறாங்களாம்...''


தம்பி உடையான்...

''அதானே, பார்த்தேன். தலையில்லாம, வால் ஆடாதே,'' என்ற மித்ரா, ''அக்கா... கேன்சர் சிகிச்சை மையம் திட்ட மீட்டிங்கில், சவுத் வி.ஐ.பி., பேச்சால், ஒரே கலகலப்பாம்...'' என்றாள்.''அப்படியா...?''''ஆமாங்க்கா... கலெக்டர் ஆபீசில நடந்த ஆலோசனை கூட்டத்தில, 30 கோடி ரூபாய் நிதி திரட்டி, கட்டடம் கட்றோம். நன்கொடையாளர் கேட்கற மாதிரி, ஒவ்வொரு பிரிவுக்கும், அவங்க பேர் வைக்கோணும்னு, ரோட்டரி நிர்வாகிகள் சிலர் அனுமதி கேட்டிருக்காங்க...''''அதுக்கு, 'சவுத்' வி.ஐ.பி., அப்படியெல்லாம் முடியாது. உங்களுக்கு ஏதாச்சும் செய்வோம். திருப்பூரை பொறுத்தவரை, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தொழில்துறையினருக்கு உதவி செய்யாம இருக்க மாட்டோம். 'நீங்க வேற தம்பி செல்வராஜூனு' சொன்னீங்க..'தம்பி உடையான் படைக்கு அஞ்சான்'னு பேசி, ரோட்டரி நிர்வாகிகளை 'கூல்' பண்ணிட்டாராம்,''''அவரு பேச்சில் கில்லாடி மித்து. அப்படியே பேசி, வழிக்கு கொண்டு வந்துடுவாரு,'' என்றாள் சித்ரா.


இப்படியும் 'கொள்ளை'

''திருப்பூரில் இருந்து சேலத்துக்கு ராத்திரி,11 மணிக்கு மேல புறப்படும் பஸ்களில், கட்டண கொள்ளை நடக்குதுங்க்கா... வழக்கமான கட்டணங்களில் இருந்து மூனிலிருந்து, அஞ்சு ரூபாய் அதிகப்படுத்தி வசூலிக்கிறாங்களாம்,''''இதபத்தி கேட்டா, 'இந்த டிக்கெட் தான் இருக்கிறது. வேணும்னா வாங்க, இல்லாட்டி இறங்கிக்கிங்க,' என கண்டக்டர் கடிக்கிறாராம்க்கா...''''மித்து, இதென்ன ராத்திரி கொள்ளையால்ல இருக்குது. சம்பந்தப்பட்ட ஆபீசர்கிட்ட புகார் போனதும், 'நேரில் வந்து கம்ப்ளைன்ட் பண்ணா, விசாரிக்கிறேன்,'னு ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி சமாளிச்சு அனுப்பிடறாங்களாம்...''


இப்படியுமா அலட்சியம்

''என்ன தான் சொல்லு. இந்த பிரச்னை தீரவே தீராது,'' என்ற சித்ரா,''ஜி.எச்., 'லிப்ட்' அடிக்கடி ரிப்பேர் ஆகுது. இதனால, மூன்றாவது தளத்தில் உள்ள வார்டுக்கு சென்ற பணியாளர்கள், நடுவில் சிக்கி கொண்டனர்,''''நல்ல வேளையா ஆபீசர் மொபைல் போன் நெம்பர் இருந்ததால், அவருக்கு பேசியதில், பணியாளர்கள் காப்பாற்றப்பட்டனர். இந்த மாதிரி, அவசர சிகிச்சைக்கு அல்லது பிரசவத்துக்கு போறவங்க சிக்கியிருந்தால், நிலை என்னவாயிருக்கும்,'' என ஆதங்கப்பட்டாள்.''நீங்க சொல்றது உண்மை தாங்க. இந்த விஷயத்தில, பொதுப்பணித்துறை ஆபீசர்ஸ், அசால்ட்டா தான் இருக்காங்க போல...''


இதிலும், கோஷ்டியா?

''அக்கா... சினிமாவுக்கு கூட்டிட்டு போறதிலும் ஆளுங்கட்சிக்காரங்க பண்ணின கூத்து தெரியுமா?'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.''சொல்லு தெரிஞ்சுக்கறேன்...''''அக்கா... ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., நடிச்ச சினிமாவுக்கு, விளம்பரப்படுத்தற வகையில, கட்சிக்காரங்களை கூட்டிட்டு போகோணும்னு, வாய்மொழி உத்தரவு. அதனால, கட்சியினர் படம் ரிலீசான நாளில், தங்கள் பக்கமுள்ள தியேட்டர்களில் ஆதரவாளர்களை கூட்டிட்டு போனாங்க...''''அதிலும், லோக்கல் மினிஸ்டர் ஒரு தியேட்டரிலும், சவுத் வி.ஐ.பி., இன்னொரு தியேட்டரிலும், தங்ளோட ஆதரவாளர்களை கூட்டிட்டு போனாங்களாம். இத கேள்விப்பட்ட பொதுமக்கள், 'அட இதிலுமா, கோஷ்டி பாப்பாங்க'ன்னு சொல்லி சிரிச்சாங்களாம்... ''''கோஷ்டியில்லாம, அரசியல் எப்படிடி?'' என சிரித்த சித்ரா, ''கொரோனா டைமில, டியூட்டி பார்த்ததற்கு பணம் இன்னும் வரலையாம்,'' என்றாள்.''எந்த டிபார்ட்மென்டில...''''கொரோனா டைமில், ஹோம்கார்டு டியூட்டி பார்த்தாங்க. அப்படி பார்த்தவங்களுக்கு, 42 நாள் சம்பளம் இன்னும் கொடுக்கலையாம்... மத்த மாவட்டங்களில் கொடுத்துட்டாங்களாம். ஆனா, இங்க மட்டும் இழுத்தடிக்கின்றனர் என ஹோம்கார்டுகள் புலம்புகின்றனர்,''


'போட்டா போட்டி'

''அக்கா... 'நார்த்' போலீஸ் ஸ்டேஷன் அதிகாரத்தை கைப்பற்ற பலரும், பல வகைகளில் முயற்சி செய்றாங்களாம்,'' என்ற மித்ரா தொடர்ந்தாள்.''அங்கிருந்த அதிகாரி, புரமோஷனில் சேலத்துக்கு போயிட்டார். அவருக்கு அப்புறம், யாருன்னு பார்த்தால், 'சிட்டி'க்குள்ள இருக்கிறவங்களில், ஒன்றிரண்டு பேரை தவிர்த்து, பாக்கி எல்லோரும், கரைபடிந்த கரங்களாக, மாமூலில் கொடி கட்டி பறக்கறவங்களாக இருக்காங்களாம்...''''இது ஒரு பக்கமிருக்க, ஸ்டேஷனுக்கு எப்படியாவது வர வேண்டும் என, 'சிட்டி'க்குள்ள இருக்கறவங்க, இங்கிருந்து வெளியே போன பழையவங்க என, பலரும் அரசியல்வாதிகளை பிடிச்சு, 'நார்த்'க்கு வர கடுமையான போட்டியில் இறங்கிட்டாங்களாம்...''''அப்ப, கடும் போட்டி நிலவுதுன்னு சொல்லு மித்து. அப்ப, 'வசூல்' மழையில நல்லா நனையலாம்னு நெனச்சு, களமிறங்கிட்டாங்க போல...''''அக்கா, இதே ஸ்டேஷனை பத்தி, இன்னொரு மேட்டர் சொல்றேன் கேளுங்க. ஆளும்கட்சியின் வாரிசு நடிச்ச படம் வெளியானப்ப, அவரோட ரசிகர்கள், டவுன்ஹாலில் உள்ள விநாயகர் கோவிலை மறிச்சு, பெரிய பேனர் வச்சாங்க,''''இதுக்கு பல தரப்பில எதிர்ப்பு வந்ததால, போலீஸ் சொல்லி கார்ப்ரேஷன்காரங்க, பேனர எடுத்துட்டாங்க. இதுசம்பந்தமாக, ரெண்டே ரெண்டு ரசிகர்கள், 'எங்க தலைவரோட பேனரை யாரை கேட்டு எடுத்தீங்கன்னு, அடாவடி செஞ்சு, மறியல் செஞ்சாங்க...''''இதபத்தி, அந்த ரசிகர்கள், சவுத் வி.ஐ.பி.,கிட்ட சொன்னதுக்கு, அவரு, 'பொது இடத்தில், ஒழுங்கீனமா பேனர் வச்சு, கட்சிக்கு கெட்ட பேர் ஏற்படுத்துறீங்கனு,' சத்தம் போட்டு வெளுத்து வாங்கிட்டாராம்.... இதனால, ரெண்டு பேரும் 'நொந்து நுாடுல்ஸ்' ஆகிட்டாங்களாம்...''


முரண்டு அதிகாரி டிரான்ஸ்பர்

''இதுதான் கரெக்ட்'' என்று சொன்ன சித்ரா, '' முரண்டு பிடிக்கும் வன அதிகாரியை டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க தெரியுமா?'' மித்ராவிடம் கேட்டாள்.''இல்லக்கா...''''வனத்துறை அதிகாரி ஒருத்தர், இங்க வந்ததிலிருந்து, ஆபீசில் இருக்கறவங்கிட்ட, வேட்டை தடுப்பு பணியாளர்கள், பொதுமக்கள் என, எல்ேலாரிடமும், கோபத்தை காட்டிட்டு, யார் சொல்றதையும் கேட்காமல், முரண்டு பிடிச்சுட்டு இருந்தாரு,''''இதனால, பலரும், அவர் மேல கடுங்கோபத்துல இருந்தாங்க. 'டிரான்ஸ்பர்' செய்யப்போறதை தெரிஞ்சுகிட்டு, எப்படியாவது மஞ்சள் நகரத்துக்கு போயிடலாம்னு காய் நகர்த்தினாரு. ஆனா, ஆசைப்பட்ட இடம் கிடைக்காம, பண்ணாரி அம்மன் குடிகொண்டுள்ள ஊருக்கு பக்கத் துல மாத்திட்டாங்க...''''ஆமாம், கூட வேல செய்யறவங்களை கொஞ்சமாவது மனுஷனா மதிச்சு நடக்கோணும். இல்லாட்டி, இப்படித்தான் துாக்கி அடிப்பாங்க,'' என்ற மித்ரா, ''ஆய்வுக்கூட்டத்தில், ஆளுங்கட்சி நிர்வாகியோட அலப்பறை தாங்க முடியலையாம்...'' என்றாள்.''யாருடி அவரு... எங்கே?''''பாத்திரப்பட்டறை இருக்கிற மண்டல ஆபீசில், போனவாரம், குடிநீர் சப்ளை சரியாயிருக்கான்னு அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்துட்ட ஆய்வுக்கூட்டம் நடந்திருக்கு. அதில, சம்பந்தமே இல்லாம ஆஜரான ஆளுங்கட்சியை சேர்ந்த 'ராம' நிர்வாகி, அதிகாரிகளிடம் தொடர்ந்து கேள்வி கேட்டிருக்கார்...''''ஒரு கட்டத்துல, எல்லாரும் ஒழுங்கா வேல செய்யணும். இல்லாட்டி, எங்ளோட சுயரூபத்தை காட்ட வேண்டியது வரும்னு, சத்தம் போட்டாராம்.. கூட் டத்துல கலந்துட்ட மேயரும், இதப்பத்தி ஒன்னுமே சொல்லாம 'கப்சிப்'னு இருந்துட்டாராம்...''அப்போது, சித்ராவின் மொபைல் போன் ஒலிக்கவே, எதிர்முனையில் பேசிய வர், 'ராமதாஸ்' இருக்காரான்னு, கேட்கவே, 'ஸாரி, ராங் நம்பர்' என்று சொல்லி, இணைப்பை துண்டித்து,''சரி கெளம்பலாம் மித்து, மழை பெரிசாயிடுச்சு...'' என்றதும் மித்ராவும் வரவே, இருவரும் புறப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X