எக்ஸ்குளுசிவ் செய்தி

எம்.எல்.ஏ.,க்கள் அடிமைகளா? நேருவுடன் பொன்முடி மோதல்!

Added : மே 24, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
'நமக்கு வாய்த்த அடிமைகள்' என, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிலரை குறிப்பிட்டு, அமைச்சர் நேரு பேசியதற்கு பதிலடியாக, 'அன்புக்கு நான் அடிமை' என, அமைச்சர் பொன்முடி, அதே மேடையில் பாடிய பாடல், இருவருக்கும் இடையிலான மோதலை வெளிப்படுத்தியது. தி.மு.க.,வின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், திருச்சியில் நடந்தது. அதில் பங்கேற்ற பேச்சாளர்கள் பேசும்போதே, அவர்களை பாதியில் நிறுத்த
DMK, Ponmudi, K N Nehru, நேரு, பொன்முடி, மோதல்

'நமக்கு வாய்த்த அடிமைகள்' என, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிலரை குறிப்பிட்டு, அமைச்சர் நேரு பேசியதற்கு பதிலடியாக, 'அன்புக்கு நான் அடிமை' என, அமைச்சர் பொன்முடி, அதே மேடையில் பாடிய பாடல், இருவருக்கும் இடையிலான மோதலை வெளிப்படுத்தியது.

தி.மு.க.,வின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், திருச்சியில் நடந்தது. அதில் பங்கேற்ற பேச்சாளர்கள் பேசும்போதே, அவர்களை பாதியில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டது. பின், திருச்சி மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் சிலரை, நன்றி தெரிவித்து பேசும்படி அமைச்சர் நேரு அழைத்தார். அதன்படி, எம்.எல்.ஏ.,க்கள் சிலர், ஒரு நிமிடத்தில் பேசி முடித்தனர்.

அவர்கள் பேசி முடித்ததும், அமைச்சர் நேரு, ''நமக்கு வாய்த்த அடிமைகள் ரொம்ப நல்லவர்கள்; இனி பொன்முடியின் அடிமையான புகழேந்தி எம்.எல்.ஏ., பேசுவார்,'' என்றார். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தங்களை அடிமை என நேரு விமர்சித்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். மேடையில் இருந்தவர்களின் முகத்தில் ஈயாடவில்லை. மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டத்திற்கு வந்த தொண்டர்களும் கடுப்பாகினர்.

இதைக் கண்ட அமைச்சர் பொன்முடி பேசுகையில், ''நேரு எப்போதும் இப்படி தான் பேசுவார். ஆனால், என்னை பொறுத்தவரை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லை,'' என கூறியதுடன், 'அன்புக்கு நான் அடிமை...' என்ற எம்.ஜி.ஆர்., பாடலை பாடி பதிலடி தந்தார்.

பொன்முடி பேச்சைக் கேட்டதும், கூட்டத்தினர் பலமாக கைதட்டினர்; நேரு முகம் உடனே மாறியது. 'எம்.எல்.ஏ.,க்களை மக்கள் தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்பி வைக்கின்றனர். எம்.எல்.ஏ., அடிமை என்றால், தொகுதி மக்களும் அடிமை தானே? பொது மக்களையும் அடிமை என்ற அர்த்தத்தில் நேரு பேசியுள்ளதால், அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்' என, சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-மே-202219:56:29 IST Report Abuse
ராஜா இரண்டும் ஒரே குப்பையில் ஊறிய மட்டைகள்.
Rate this:
Cancel
Yogeshananda - Erode,இந்தியா
24-மே-202219:06:32 IST Report Abuse
Yogeshananda தப்பு... கோபாலபுரத்து கொத்தடிமைகள்... இப்ப சந்தோசமா
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
24-மே-202217:12:04 IST Report Abuse
Tamilan நேரு கூறியது உண்மை மட்டுமல்ல. உலக பொதுமறை . உலகில் உள்ள அணைத்து அதிகார வர்க்கத்திற்கும் பொருந்தும். பொன்முடி கூறுவது வெறும் கதை, கவிதை , கவிகள் கூறி அனைவரையும் ஏமாற்ற முயற்சிக்கிறார் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X