வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருநெல்வேலி,- -திருநெல்வேலி மாவட்டத்தில் 55 கல்குவாரிகளில் உள்ள முறைகேடுகள் குறித்து 6 குழுக்கள் ஆய்வு செய்ய உள்ளதாக கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் அடை மிதிப்பான்குளம் கல்குவாரியில் கடந்த 14 ல் நடந்த பாறைச் சரிவில் 6 பேர் சிக்கினர். இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். 4 பேர் இறந்தனர். ஏற்கனவே மூன்று பேர் உடல்கள் மீட்கப்பட்டு நிலையில் 4வது நபர் ராஜேந்திரன் உடலை மீட்பதில் சிரமம் நீடித்தது. நேற்று முன்தினம் இரவில் அவர் உடல் மீட்கப்பட்டது.
நேற்று கலெக்டர் விஷ்ணு, எஸ்.பி.சரவணன் ஆகியோர் கூறியதாவது: மீட்பு முயற்சியில் ராமநாதபுரம் ஐ.என்.எஸ். கடற்படையினர், கூடங்குளம் அணுமின் நிலைய குழுவினர், கனிம வளத்துறை, வருவாய்த்துறை,போலீஸ், தனியார் குவாரி அதிகாரிகள் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 55 கல்குவாரிகளை ஆய்வு செய்ய சப்-கலெக்டர்கள் தலைமையில் 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் கனிமவளத் துறையினர் 3 பேர், 2 வருவாய்த்துறை அதிகாரிகள், ஒரு போலீஸ் அதிகாரி இருப்பர். டோட்டல் ஸ்டேஷன் சர்வே கருவி மூலம் ஆய்வு நடத்தப்படும்.
விபத்து நடந்த கல்குவாரி லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. குழு ஆய்வு அறிக்கை வந்த பிறகு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.செல்வகுமார் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்றவர்களின் உடல்களை ஒப்படைப்பது தொடர்பாக குடும்பத்தினருடன் பேசி வருகிறோம் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE