சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

பொருளின் எடையை பார்த்து வாங்குங்க!

Added : மே 24, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
பொருளாதார நிபுணர் சித்தார்த்தன் சுந்தரம்: பெரும்பாலான நிறுவனங்கள், தாங்கள் சந்தைப்படுத்தும் பொருட்கள் அல்லது சேவைகளின் விலையை உயர்த்த ஆரம்பித்திருக்கின்றன. அதேநேரத்தில், மக்களின் மனநிலையை அறிந்துள்ள சில நிறுவனங்கள், தாங்கள் சந்தைப்படுத்தும் அனைத்து பொருட்களின் விலையையும் அதிகரிப்பதற்கு பதிலாக, சில பொருட்களின் எடையை குறைத்து, விற்பனை செய்யத் துவங்கிஉள்ளன.
பொருளின் எடையை பார்த்து வாங்குங்க!

பொருளாதார நிபுணர் சித்தார்த்தன் சுந்தரம்: பெரும்பாலான நிறுவனங்கள், தாங்கள் சந்தைப்படுத்தும் பொருட்கள் அல்லது சேவைகளின் விலையை உயர்த்த ஆரம்பித்திருக்கின்றன. அதேநேரத்தில், மக்களின் மனநிலையை அறிந்துள்ள சில நிறுவனங்கள், தாங்கள் சந்தைப்படுத்தும் அனைத்து பொருட்களின் விலையையும் அதிகரிப்பதற்கு பதிலாக, சில பொருட்களின் எடையை குறைத்து, விற்பனை செய்யத் துவங்கிஉள்ளன.

உதாரணமாக, மூன்று மாதங்களுக்கு முன், 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட, 155 கிராம் எடையுள்ள பிரபல நிறுவன தயாரிப்பான சோப்பின் எடை, இப்போது, 135 கிராமாக குறைக்கப்பட்டு உள்ளது. அதேபோல, நொறுக்கு தீனி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, சில பொருட்களின் விலையை உயர்த்தாமல், 55 கிராமுக்கு பதிலாக, 42 கிராமாக குறைத்து விற்பனை செய்கிறது.

மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் பொருட்களை தயாரிக்கும் ஒரு முன்னணி நிறுவனமும், 1, 5, 10 ரூபாயில் விற்பனையாகும் பொருட்களின் விலையை கூட்டாமல், எடையை குறைத்து விற்பனை செய்கிறது. 'இதனால், பொருட்களின் நுகர்வு குறையவில்லை' என்கின்றனர், அந்த நிறுவனத்தின் அதிகாரிகள். அதேபோல, சமையல் எண்ணெய், பால் பொருட்கள் விலை உயர்வாலும், போக்குவரத்து செலவு அதிகரிப்பாலும், உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பல நிறுவனங்கள், அந்த சுமையை நுகர்வோர் மீது சுமத்த ஆரம்பித்திருக்கின்றன.

பொதுவாக, பொருட்களின் விலையில் அக்கறை செலுத்துவதைப் போல, பொருட்களின் எடையில் மக்கள் அதிக கவனம் செலுத்துவது இல்லை. உதாரணமாக, ஒரு சாக்லேட், 40 ரூபாயா என்பதில் இருக்கும் கவனம், அது, 35 கிராமா, 30 கிராமா என்று பார்ப்பதில் இருப்பதில்லை. மக்களின் இந்த மன உளவியலை அறிந்துள்ள நிறுவனங்கள், பணவீக்கத்தால் தங்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்க, எடை குறைப்பு என்ற உத்தியை கையில் எடுத்துள்ளன.

இதுதவிர, வேறொரு உத்தியையும், சில நிறுவனங்கள் அறிமுகப்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. அதாவது, ஏற்கனவே இருந்து வரும், 10 முதல், 35 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் உள்ள பொருட்களின் எடையை மட்டும் குறைத்து வருகின்றன.இனி, கடைகளுக்கு சென்று எந்தப் பொருளை வாங்குவதாக இருந்தாலும், அதன் எடை எவ்வளவு குறைக்கப்பட்டு உள்ளது என்பதை பார்த்து வாங்குவது அவசியம்.

அதேநேரத்தில், பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக, பொருட்களின் விலையை உயர்த்தினாலும், பின்னர் அந்த விலையை ஒரு போதும் குறைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nancy - London,யுனைடெட் கிங்டம்
24-மே-202214:18:35 IST Report Abuse
Nancy என் இப்படி 135 கிராமா 55 கிராம 42 கிராம - இது என்ன கணக்கு அரசாங்கம் தான் இவனுவலுக்கு ஆப்பு வைக்க முடியும், 50 100 250 500 1000 மட்டுமே அனுமதிக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X