கிணற்றில் குளித்த மாணவர் பலி

Added : மே 24, 2022 | |
Advertisement
கீழச்சேரி : கீழச்சேரி பகுதியில், கிணற்றில் குளித்த மாணவர், நீரில் மூழ்கி இறந்தார்.புட்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் மகன் சாருகேஷ், 17. பிளஸ் 1 படித்து வரும் இந்த மாணவர், நேற்று முன்தினம், மப்பேடு அடுத்த, கீழச்சேரி பகுதியில் உள்ள பாட்டி வீட்டிற்கு பெற்றோருடன் வந்துள்ளார்.பின், நண்பர்களுடன் அப்பகுதியில், ஓடைக்கு அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். நீச்சல்


கீழச்சேரி : கீழச்சேரி பகுதியில், கிணற்றில் குளித்த மாணவர், நீரில் மூழ்கி இறந்தார்.புட்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் மகன் சாருகேஷ், 17. பிளஸ் 1 படித்து வரும் இந்த மாணவர், நேற்று முன்தினம், மப்பேடு அடுத்த, கீழச்சேரி பகுதியில் உள்ள பாட்டி வீட்டிற்கு பெற்றோருடன் வந்துள்ளார்.

பின், நண்பர்களுடன் அப்பகுதியில், ஓடைக்கு அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.தகவலறிந்து, அப்பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் உதவியுடன் பொதுமக்கள் மாணவரை மீட்டனர். மப்பேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது மாணவர் இறந்தது தெரிந்தது. இதையடுத்து, மாணவரின் உடலை கீழச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு கொண்டு சென்றனர்.மப்பேடு போலீசார், நேற்று காலை, மாணவரின் உடலை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X