'பழைய நினைப்புல இருக்காதீங்க!':அமைச்சருக்கு அண்ணாமலை பதிலடி

Added : மே 24, 2022 | கருத்துகள் (56) | |
Advertisement
'பெட்ரோல், டீசல் விலையை, 72 மணி நேரத்தில் குறைக்கவில்லை என்றால், கோட்டையை முற்றுகையிடுவோம்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதற்கு பதிலளித்த, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ''அண்ணாமலை, சொந்த ஊரை தாண்ட முடியாது,'' என, எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக, அண்ணாமலை கூறியதாவது: தி.மு.க., ஆட்சியில் ரவுடிகள்
'பழைய நினைப்புல இருக்காதீங்க!':அமைச்சருக்கு அண்ணாமலை பதிலடி

'பெட்ரோல், டீசல் விலையை, 72 மணி நேரத்தில் குறைக்கவில்லை என்றால், கோட்டையை முற்றுகையிடுவோம்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கு பதிலளித்த, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ''அண்ணாமலை, சொந்த ஊரை தாண்ட முடியாது,'' என, எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக, அண்ணாமலை கூறியதாவது: தி.மு.க., ஆட்சியில் ரவுடிகள் தான் அமைச்சர்களாக இருக்கின்றனர் என்பதற்கு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நல்ல உதாரணம்.

அமைச்சர் போலவா பேசுகிறார்? கரூரை தாண்ட விட மாட்டாராம். இவர் என்ன, 'பேரி கார்டு' போட்டு தடுக்கும், 'செக்யூரிட்டி' வேலை பார்க்கிறாரா?இவர்களை போல, கச்சத்தீவு உள்ளிட்ட பல விஷயங்களிலும், தமிழகத்துக்கான உரிமையை விட்டு கொடுத்து விட்டு, மக்களை ஏமாற்றி நாடகம் போடும் நபர், அண்ணாமலை கிடையாது என்பதையும், அமைச்சர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

அமைச்சரோ, அவரோடு எப்போதும் இருக்கும் அடியாட்களோ, ரவுடிகளோ, நெஞ்சில் துணிவு இருந்தால், கரூர் வந்து என்னை தடுத்து பார்க்கட்டும்; அதன்பின், என்ன நடக்கிறது என்பது தெரியும்!தமிழகத்தில் தற்போது இருப்பது, பழைய பா.ஜ., என்ற நினைப்பில் அமைச்சர் பேசி இருந்தால், அதை உடனே மாற்றி கொள்ள வேண்டும்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
maya - Junnagate,இந்தியா
24-மே-202219:33:20 IST Report Abuse
maya குரைக்கிற நாய் என்றைக்கும் கடிக்காது.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
24-மே-202218:34:57 IST Report Abuse
Girija பி ஜெ பிக்குனு கட்சி ஒரு தினசரி செய்தித்தாளை தொடங்க நேரம் வந்துவிட்டது , காலத்தின் கட்டாயம்.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
24-மே-202216:57:50 IST Report Abuse
தமிழ்வேள் திருட்டு முக அமைச்சநுங்கள் மீது வேறு மாநிலங்களில் கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடுத்தெருவில் பிடரியில் கைவைத்து தள்ளிச்சென்றால் , இவனுவோலின் கோட்டம் அடங்கும் ....அடிமை அப்பாவு பெர்மிஷன் எல்லாம் தேவையில்லை ....தமிழகத்தை கெடுத்தது மொன்றுபேர் ....ராமசாமி அண்ணாதுரை கட்டுமரம் ....இந்த மூன்று விளங்காத ஜந்துக்களின் பெயர் சிந்தனை எழுத்துக்கள் தமிழ் மொழியிலிருந்து முற்றிலும் துடைத்து எறியப்பட்டால்தான் , இந்த மாநிலம் உருப்படும் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X