காதலன் வெறிச் செயல் காதலி, அவரது சகோதரர் கொலை

Added : மே 24, 2022 | |
Advertisement
நகரி : கணவருடன் செல்ல விரும்பியதாக கூறிய காதலியை, கள்ளக்காதலன் சரமாரியாக கட்டையால் அடித்து கொலை செய்துள்ளான். மேலும், அதை தடுக்க வந்த சகோதரரையும் அடித்து கொலை செய்தான்.சித்துார் மாவட்டம், மதனப்பள்ளி அடுத்த, சத்தியசாய் காலனியைச் சேர்ந்தவர் ராதாராணி, 28. இவருக்கும், அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நரசிம்மலு, 32, என்பவருக்கும், ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில், கணவர், மனைவிக்கும் இடையே, நான்கு மாதங்களாக குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், ராதாராணி, கணவரிடம் இருந்து பிரித்து, அதே பகுதியில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார்.அப்போது, ராதாராணிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராமு, 30, என்பவருக்கும் இடையே கள்ள தொடர்பு ஏற்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம், ராதாராணியின் கணவர் நேரில் வந்து மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்துமாறு அழைத்தார்.

அதற்கு, ராதாராணியும் ஒப்புக் கொண்டதால், ஆத்திரமடைந்த ராமு, உருட்டை கட்டையால் அடித்து கொலை செய்தார்.அப்போது தடுக்க வந்த ராதாராணியின் சகோதரர் வெங்கடரமணா, 37 என்பவரையும் ராமு கட்டையால் அடித்து கொலை செய்தார்.இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். புங்கனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போது ராமு தப்பியோடி விட்டார். புங்கனுார் போலீசார் வழக்கு பதிந்து ராமுவை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X